தனியார் கல்லூரி பேராசிரியை மாயம்

தருமபுரி அருகே தனியார் கல்லூரி பேராசிரியை மாயம்.போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பேராசிரியை தேடி வருகின்றனர்.
தனியார் கல்லூரி பேராசிரியை மாயம்
Published on

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லதா (வயது45). இவரது மகள் ரசிகப்பிரியா (23). இவர் தருமபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் லதா தேடிபார்த்தார்.

எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ரசிகப்பிரியா மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து லதா கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தன் மகளை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பேராசிரியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com