என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிற்சாலையில் மின்மோட்டாரை திருடிய தொழிலாளி கைது
- பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிற்சாலையில் மின் மோட்டாரை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
- வழக்கு பதிவு செய்து நவீன்குமாரை சிறையில் அடைத்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தொழிற் சாலையில் மின் மோட்டார் திருடிய வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் பகுதியை சார்ந்தவர் சேகர். இவரது மகன் நவீன் குமார் (வயது 26). இவர் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் மஞ்சவாடி கணவாய் அருகே உள்ள வெள்ளையப்பன் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் கெமிக்கல் ஆலையில் கடந்த 6ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு வெளியில் வரும்போது ஆலையில் இருக்கும் வாட்ச்மேனுக்கு தெரியாமல் 3 எச்.பி திறன் கொண்ட மின் மோட்டாரை பதுக்கி வைத்து எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது சந்தேகத்தின் பேரில் ஆலை நிர்வாகம் தொழிலாளி நவீன் குமாரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக எடுத்து சென்ற மின் மோட்டாரை கைப்பற்றினர்.
இதையடுத்து இவர் மேலும் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஆலை நிர்வாகம் இவரை பிடித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து வாலிபர் நவீன்குமாரை சிறையில் அடைத்தனர். வேலை செய்யும் தொழிற் சாலையிலேயே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரால் ஆலை நிர்வாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






