பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

இண்டூர் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்சீட்டுக்கட்டு, பணம் பறிமுதல்
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
Published on

தருமபுரி மாவட்டம் இண்டூர் போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தலவாய் அள்ளி சமுதாயக்கூடம் எதிரில் சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் அப்பகுதிக்குச் சென்று சோதனை செய்தபோது பணம் வைத்து 5 பேர் கொண்ட கும்பல் சூதாடியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீ சார் சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த தில் அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (48), ராமராஜ் (61) முருகேசன் (42) கோபால் (60) சிவக்குமார் (30) ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்களிட மிருந்து சீட்டு கட்டுகள், மற்றும் ரூ. 250 பணம் ஆகியவைகளை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com