என் மலர்
தர்மபுரி
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
- அண்ணன் நிலத்தை கிரையம் செய்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கனகராணி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள, வெத்தலக்கா ரன்பள்ளம் சாலைப் பகுதியை சேர்ந்தவர் கோபு, இவரது மனைவி கனகராணி (45). கனகராணியின், தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் தந்தை பெயரில் உள்ள பூர்வீக நிலத்தை, தனக்கு முறையாக பிரித்து தராமல், போலியான வாரிசு சான்று தயார் செய்து, தனது அண்ணன் அவரது மனைவி பெயருக்கு கிரையம் செய்து, அபகரித்துக் கொண்டு, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
எனவே பூர்வீக நிலத்தை, போலி வாரிசு சான்று மூலம், அபகரித்து கொண்டு, கொலை மிரட்டல் விடுக்கும், அண்ணன் மீது நடவடிக்கை எடுத்து, பூர்வீக நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில்,தெரிவிக்க ப்பட்டுள்ளது, அண்ணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி, தங்கை தருமபுரி எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு வழங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிலோ ரூ.126-க்கு விற்பனை .
- வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.
தருமபுரி,
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களைக் குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை பழம் திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் இந்தியாதான். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எலுமிச்சை சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் விளையும் எலுமிச்சை பழங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தருமபுரி மாவட்டத் திற்கு எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. கனிகளில் ராஜ கனியாக இருந்து வரும் எலுமிச்சை மருத்துவகுணம் நிறைந்து காணப்படுவதாக மருத்து வர்கள் தெரிவிக்கின்றனர்.
வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிக்கப் பொது மக்கள் எலுமிச்சை பழச் சாற்றை அதிகமாகப் பருகி வருகின்றனர். கடவுள் வழிபாடு, சைவ, அசைவ உணவகங்களில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது. இல்லத்தரசிகளின் வீடுகளிலும் எலுமிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் பெரும்பாலான டீ பிரியர்கள் பால் கலந்து டீ அருந்துவதை தவிர்த்து விட்டு எலுமிச்சை சாறு கலந்த டீ அருந்துவதால் பிரபலமாக (லெமன் டீ) விற்பனை செய்யப்படுகிறது. இதனால், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து உள்ளது. மழை மற்றும் பணியின் காரணமாக விளைச்சல் குறைந்து உள்ளதால் வரத்து குறைந்து உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களிடத்தில் எலுமிச்சை பழத்தின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் பல மாதங்களாக விலை உயர்ந்துள்ளது. முதல் தரமான பழம் ஒரு கிலோ ரூ.200-க்கும் 2-ம் தரம் ரூ.150-க்கும், 3-ம் தரம் ரூ.126-க்கும் விற்பனையாகிறது. 2 மற்றும் 3-வது தரமான பழங்கள் மட்டும் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
முதல் தரமான பழங்கள் வெளிச் சந்தைகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. மூன்றாம் தரமான ஒரு எலுமிச்சைபழம் 5 ரூபாயும், இரண்டாம் தரமான ஒரு எலுமிச்சைபழம் 7 ரூபாயும், முதல் தரமான ஒரு எலுமிச்சை 10 ரூபாய் என விற்பனை செய்யப்படு கிறது. வரும் நாட்களில் உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ள தாக வியாபாரிகள் தெரிவிக்கின்ற னர்.
- தனியார் பட்டாசு கடையில் நடந்த தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
- மனுவை பரிசீலித்து அரசு வேலை ஒதுக்கிட செய்ய வேண்டும் என கூறினார்.
தருமபுரி,
ஓசூர் அருகே கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த 7-ந் தேதி தனியார் பட்டாசு கடையில் நடந்து தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே டி அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த வேடப்பன் (வயது 23) என்பவருக்கு கடந்த மாதம் 17-ந் தேதி தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வேடப்பனின் மனைவி சோனியா காந்தி நேற்று தருமபுரியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் சாந்தியிடம் ஒரு மனு அளித்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் பி.ஏ. வரை படித்துள்ளேன் எனக்கு டி அம்மாபேட்டையை சேர்ந்த வேடப்பனுக்கும் எனக்கும் கடந்த மாதம் 17-ந் தேதி அன்று கைலாபுரம் முருகன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டோம். எனது கணவர் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள தனியார் பட்டாசு கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 7-ந் தேதி எனது கணவர் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது பட்டாசு குடோனின் தீ விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதனால் வாழ்வாதாரம் இழந்த ஆதரவன்றி தவித்து வருகிறேன். எனவே அரசு பணிவுடன் எனது மனுவை பரிசீலித்து எனக்கு அரசு வேலை ஒதுக்கிட செய்து உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- 10-ம் வகுப்பில் 27 மதிப்பெண்கள் எடுக்கப்பட்டு 47 ஆக திருத்தம் செய்யப்பட்டது.
- குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
தருமபுரி,
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தேர்ச்சி பெறாமல் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை அளித்து பணியில் சேர்ந்ததாக நல்லம்பள்ளி தாசில்தார் தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ரபையனஅள்ளி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன். இவர் தருமபுரி மாவட்டம் பங்கு நத்தம் அடுத்த பண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு 16.5.1998-ம் வருடம் முதல் நல்லம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் செயலாளராக பணிக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்ததாகவும் அவருடைய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை உண்மை தன்மை அறியும் பொருட்டு தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனருக்கு அனுப்பியும் அவர்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பி 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்கப்பட்டது.
அதில் கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 27 மதிப்பெண்கள் எடுக்கப்பட்டு அதனை திருத்தம் செய்யப்பட்டு 47 மதிப்பெண் பெற்றுள்ளதாக பொய்யான சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்து உள்ளதாக தெரியவந்தது. அதன் பேரில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறினார். அதன் அடிப்படையில் தருமபுரி எஸ்.பி. ஸ்டீபன் ஜோசப் பாதம் உத்தரவின் பெயரில் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கார்த்திகேயன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நிழற்கூடம், குடிநீர் , மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
- அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தொப்பூர்,
தமிழக அரசின், பொது சுகாதார துறை சார்பில், நல்லம்பள்ளி அருகே தர்மபுரி கலெக்டர் பங்களா முதல் தடங்கம் மேம்பாலம் வரை, 8 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்,
நடப்போம், நலம்பெறுவோம் என்ற திட்டப் பணியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார். இதற்க்காக 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்காக, ஒவ்வொரு கிலோ மீட்டர் இடையே, ஒய்வு நிழற்கூடம், குடிநீர் வழங்கும் இடங்கள் மற்றும் மரம் இல்லாத இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடு பணிகளை, சம்மந்தப்பட்ட துறையினர், தீவிரமாக செய்து வருகின்றனர், இவ்வாறு நடந்து வரும் இப்பணிகளை, தர்மபுரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெயந்தி , தர்மபுரி கலெக்டர் பங்களா பின்புற சாலைப் பகுதியில், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உடன் துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் சக்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வாசுதேவன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், லோகநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்,
- பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார்.
- 146 மகளிர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆலோசணை படி காரிமங்கலம் வட்டார இயக்க மேலாண்மை அலகு மையத்தில் காலை உணவு திட்ட மகளிருக்கான உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா மேற்பார்வையில், வட்டார வள மைய இயக்க மேலாளர் அனுசுயா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முருகம்மாள், சிவகாமி முன்னிலை வகித்தனர். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார்.
காரிமங்கலம் ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு தயாரித்து அளிக்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களில் 146 பள்ளிகளில் இருந்து தலா ஒருவர் வீதம் 146 மகளிர்களுக்கு காலை, மாலை என 2 பிரிவுகளாக உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது. நிகழச்சியில் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேசும்போது:-
முதலைமைச்சரின் காலை உணவு திட்டம் உணவு தயாரிக்கும் கூடத்தில் தினந்தோறும் மாதிரி உணவு எடுத்து வைக்கவும், உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்தும், உணவுப் பொருள்களில் சிலவற்றில் வீட்டளவில் கலப்படம் கண்டறிதல் குறித்து உணவுப் பொருட்கள் கொண்டு நேரடி செயல் விளக்கமுடன், காலாவதி தன்மை கவனித்து உபயோகிக்கவும், பயிற்சியில் தெரிவித்த நடைமுறைகள் வழிமுறைகள் முறையாக பின்பற்ற படுதலுடன் பதிவேடுகளும் பராமரிக்கபட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.
- தமிழக முதல்-அமைச்சருக்கு கிராம நன்றி தெரிவித்தனர்.
- பூஜை செய்து இனிப்பு வழங்கி முதல் பயணத்தை தொடங்கி வைத்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சக்கில் நத்தம் மலை கிராமத்தில் 120 குடும்ங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இம்மலை கிராமத்திற்க்கு இது நாள் வரை பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரவும், மருத்துவமனைக்கு செல்லவும், வேலைக்கு சென்று வரவும் வாகனவசதி இல்லாமல் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.
எனவே இக்கிரா மத்திற்க்கு அரசு பஸ் வேண்டி நீண்ட காலமாக போராடி வந்த நிலையில் கடந்த வாரம் இது குறித்து தமிழக முதல் அமைச்சரின் தனிபிரிவிற்க்கு மனு அளித்திருந்தனர். இதையறிந்த தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இக்கிராமத்திற்க்கு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இன்று 16-ம் எண் அரசு நகர பஸ் பாலக்கோட்டில் இருந்து கோட்டூர், கரகூர் வழியாக ஈச்சம்பள்ளம் சக்கில் நத்தம் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டு போக்கு வரத்து துவக்கப்பட்டது. முதன்முதலாக கிராமத்திற்கு வந்த பஸ்சை ஊர் பொது மக்கள் அலங்கரித்து பூஜை செய்து இனிப்பு வழங்கி முதல் பயணத்தை தொடங்கி வைத்தனர். கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் வழங்கிய தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பேவுஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், ஊர்கவுண்டர்கள் முருகேசன், கோவிந்தராஜ், மந்திரி கவுண்டர்கள் மாதையன், ஜெய்சங்கர், மற்றும் ராஜா, நெடுமாறன் முன்ராஜ், கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
- 459 மனுக்கள் வரப்பெற்றன.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 459 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டகலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதி-4 பதவிக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித் துணை ஆட்சியர் சையது ஹமீத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் நசீர்இக்பால், மிரியாம் ரெஜினா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போலீசார் கார்த்திகேயன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி:
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தேர்ச்சி பெறாமல் தேர்ச்சி பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழை அளித்து பணியில் சேர்ந்ததாக நல்லம்பள்ளி தாசில்தார் தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ரபையனஅள்ளி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் கார்த்திகேயன். இவர் தருமபுரி மாவட்டம் பங்கு நத்தம் அடுத்த பண்ட அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு 16.5.1998-ம் வருடம் முதல் நல்லம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் செயலாளராக பணிக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்ததாகவும் அவருடைய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை உண்மை தன்மை அறியும் பொருட்டு தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனருக்கு அனுப்பியும் அவர்கள் மூலமாக சென்னைக்கு அனுப்பி 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்கப்பட்டது.
அதில் கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 27 மதிப்பெண்கள் எடுக்கப்பட்டு அதனை திருத்தம் செய்யப்பட்டு 47 மதிப்பெண் பெற்றுள்ளதாக பொய்யான சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்து உள்ளதாக தெரியவந்தது.
அதன் பேரில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறினார்.
அதன் அடிப்படையில் தருமபுரி எஸ்.பி. ஸ்டீபன் ஜோசப் பாதம் உத்தரவின் பெயரில் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கார்த்திகேயன் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஒகேனக்கலில் நீர் வரத்து 4 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
- அருவிகளில் தண்ணீர் சீறாக பாய்ந்து ஓடுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி–களில் பெய்யும் மழையை பொறுத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வ ரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் கடந்த 9 தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் சரிந்து 4 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
இதன்காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறாக பாய்ந்து ஓடுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம், கடத்தூரை சுற்றியுள்ள, 30-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர் பயிராக காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர். இதில் அதிக அளவு தக்காளியை பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த, 10 நாட்களுக்கு முன்பு , ஒரு பாக்ஸ், தக்காளி விலை ரூ. 100 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.இதனால் அறுவடை கூலி கூட கிடைக்காத நிலையில் கடும் விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் வரை 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ், 200 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி நேற்று வரத்து குறைவால் திடீரென விலை உயர்ந்து, 25 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ், ரூ 500க்கு விற்கப்பட்டது. இதனால் தக்காளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தக்காளி மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- தருமபுரியில் ஆடு கோழி திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- திருடி செல்லும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவலாகி வைரலாகி வருகிறது.
தருமபுரி அருகே கண்காணிப்பு கேமரா இருப்பதை தெரிந்தும் முகத்தை மறைத்துக் கொண்டு ஆடு மற்றும் கோழிகளை திருடி சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆடு, கோழிகள் திருட்டு
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கோடியூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது விவசாய நிலத்தில் பண்ணை அமைத்து ஆடு கோழிகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆட்டுப்பண்ணையில் நுழைந்து ஆடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு அதன் கதவை பூட்டாமலேயே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கோழி, ஆட்டுப்பண்ணையில் நுழைந்து ஆடு மற்றும் 3 கோழிகளை பிடித்து சென்றுள்ளனர்.
ஆடு மற்றும் கோழிகள் கத்தும் சத்தத்தை கேட்டு கிருஷ்ணன் வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது 3 வாலிபர்கள் ஆடு மற்றும் கோழிகளை திருடி மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுள்ளனர்.
மேலும் திருடப்பட்ட ஒரு ஆட்டின் விலை ரூ.6000 எனவும் 2 கோழிகளின் விலை ரூ.800 என மொத்தம் ரூ.6800 மதிப்பு ஆகும்.
இதுகுறித்து கிருஷ்ணன் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்தனர்.
அப்போது 3 வாலிபர்கள் ஆட்டுப்பண்ணையில் நுழைந்து கோழி மற்றும் ஆடுகளை திருடி செல்லும் காட்சி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த காட்சியை வைத்து போலீசார் விசாரித்ததில் தடங்கம் பகுதியைச் சார்ந்த கந்தசாமி மகன் கமலக்கண்ணன்(20), மணி மகன் பிரேம்குமார்(23), ஜெகநாதன் ஆகிய 3 பேரும் ஆடு, கோழிகளை திருடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் 3 பேரும் ஆடு மற்றும் கோழிகளை திருடி செல்லும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவலாகி வைரலாகி வருகிறது.
கைதானவர்களிடம் இருந்து ஆட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.






