என் மலர்
தர்மபுரி
- தருமபுரியில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
- ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. நல்லம்பள்ளி, பென்னாகரம் மற்றும் அரூர் ஒன்றியத்தில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது.
அலுமினிய பாக்கெட்கள், அனுமதிக்கப்பட்ட உணவு கொள்கலன்கள், நுகர்வோர் பாத்திரங்கள்ஆகியவற்றில் மட்டுமே உணவு பொருட்கள் வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப்பை களில் உணவு பொருட்களை வழங்கக்கூடாது.
பான்மசாலா குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்கும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிக்க, தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்பட பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.
இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நிறமி சேர்க்கக்கூடாது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இயங்கும் வெளிப்புற கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 100 சதவீதம் புகையிலை பொருட்களை தடை செய்யப்பட வேண்டும்.
மேலும் கடத்தூர் பகுதிகளில்புகையிலை பொருட்கள் குறித்து அதிகளவு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும், Tn Food Safety Consumer App செயலிக்கும் மற்றும் foodsafety.tn.gov.in இணைய தளத்திலும் தெரி விக்கலாம்.
இக்கூட்டத்தில் உணவு பாதுகா ப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா, துணை இயக்குநர், ஜெயந்தி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிமேகலை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராமதாஸ், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள்) பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்,குமணன், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சி.கந்தசாமி, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகரவர்த்தகர் சங்கம், விநியோகிப்பாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
- விடுதி காப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச். புதுப்பட்டி அரசு மாணவியர் விடுதி பெண் குழந்தைகள் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
தருமபுரி மாவட்டம். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச். புதுப்பட்டியில் அரசு மாணவியர் விடுதி ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் 56 மாணவிகள் தங்கி அருகில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.
இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவிகள் அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, புதுப்பட்டி சுற்று வட்டார கிராமப் பகுதியில் உள்ள பட்டியல் இன ஏழை மாணவிகள் அதிகளவில் படித்து வருகின்றனர்.
இவர்கள் தாங்கள் இருக்கும் அரசு விடுதியில் குளிப்பதற்கு தண்ணீர் இல்லாததால், அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விவசாய கிணற்றில் இருந்து பக்கெட்டுகளில் தண்ணீர் எடுத்து வந்து விடுதியில் குளித்து வருவதாக கூறப்படுகிறது.
கழிப்பிட வசதி இல்லாததால் அருகில் உள்ள விவசாய நிலப் பகுதி முட்புதர்கள். ஓடை போன்ற பகுதிகளுக்கு சென்று காலைக்கடனை கழித்து வரும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அவதி அடைந்த பள்ளி மாணவிகள் இன்று காலை 8.30 மணியளவில் அடிப்படை வசதிகளை எங்கள் விடுதிக்கு செய்து கோரி கூறி திடீரென விடுதி முன்பு உள்ள நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் தரையில் அமர்ந்து காலி பக்கெட்டுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாணவிகளின் பரிதாப நிலை அறிந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், மாணவிகளுக்கு ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று விடுதி காப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விடுதி மாணவிகள் கூறியதாவது:-
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம், இது குறித்து விடுதி காப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குடிதண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. கழிப்பிட வசதி இல்லாததால் காலை கடனை கழிப்பதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே உடனடியாக அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் எங்களுக்கு அடிப்படை செய்திகளை செய்து தர வேண்டும் என்று முறையிட்டனர்.
தகவல் அறிந்து வந்த விடுதி காப்பாளர் சித்ரா இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ இன்ஸ்பக்டர் லதா நேரில் சென்று மாணவியரின் குறைகளை கேட்டு அறிந்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக மாணவிகளுக்கு உறுதியளித்தார். இன்று காலை திடீரென பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வத்தல்மலையில் காபி கொட்டை அறுவடை தொடங்கியது.
- மலைவாழ் மக்களுக்கு காபி சாகுபடி மூலம் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தருமபுரி அடுத்த வத்தல்மலை கடல் மட்டத்தில் இருந்து 3500 மீட்டர் உயரத்தில் உள்ளது. வத்தல்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னாங்காடு, ஒன்றியகாடு, பால்சிலம்பு, பெரியூர், குழியனூர், நாயக்கனூர், கொட்டாங்காடு உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இந்த மலையில் அமைந்துள்ளது.
ஆண்டு முழுவதும் இந்த மலைக்கிராமங்களில் குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் மலைப்பயிர்களான காபி, மிளகு, கடுகு, ஆரஞ்சு, பலா உள்ளிட்ட மலைப்பயிர்களை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த மலை கிராமங்களில் ஆண்டு தோறும் சுமார் 300 ஏக்கருக்கும் மேல் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு சாகுபடி செய்யப்பட்ட காபி கொட்டைகளை அறு வடை செய்யும் சீசன் தற்போது துவங்கி உள்ளதால் அங்குள்ள மலைகிராம மக்கள் காபி அறுவடை செய்யும் பணியில் மும்மரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் சாகுபடி செய்யபட்டுள்ள காபி கொட்டைகளை தருமபுரி மாவட்டத்தில் விற்பனை செய்ய போதிய வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் சேலம் போன்ற பகுதிகளில் உள்ள விற்பனை நிலைங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்கின்றனர். மேலும் மலைக்கிராமங்களுக்கு வரும் இடைத்தரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலை உள்ளது.
இதனால் இப்பகுதிகளில் காபி சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் பெரும் இழப்பு ஏற்படுகிறது. வத்தல்மலையில் உள்ள மலைவாழ் விவசாயிகளின் பிரதான தொழிலாக உள்ள காபி சாகுபடி மேலும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய அரசு உரிய மானியம் வழங்கினால் இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு காபி சாகுபடி மூலம் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். இடைத்தரகர்கள் இல்லாமல் இப்பகுதிகளிலியே காபி கொட்டை கொள்முதல் மையம் அமைத்து உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தரும்புரியில் கிருஸ்துவர்களின் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
- கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொது வாக கல்லறைகளில் அடக்கம் செய்யப் படுகின்றனர். கல்லறை களுக்குச் சென்று அவர்களை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள், சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தையொட்டி தருமபுரி சந்தை ப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் கல்ல றைகளை கழுவி, பூக்களால் அலங்க ரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்தனர்.
- தருமபுரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீஸ் எஸ்.பி உத்தரவின் பேரில் நடவடிக்கை
தருமபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி சிலர் பதுக்கி வைத்து விற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதத்துக்கு புகார் வந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட போலீ சாருக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பெரும் பாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது் பெரும்பாலை ஆற்று பாலம் அருகே மோட்டர் சைக்கிளில் சாக்கு மூட்டையை வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது மது விற்பனை செய்வதும், அவர்கள் கொம்பாடியூரை சேர்ந்த சண்முகம் (65) முருகேசன் (52) என தெரியவந்தது. இதனை யடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.
அதே போன்று பொம்மிடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வட சந்தையூர் அருகே மது விற்பனை நடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் மது விற்றது தெரியவந்தது.
விசாரணையில் அவர் பொம்மிடி கிராமத்தை சேர்ந்த பவுனேசன் மகன் ரஞ்சித்குமார்(42) என்பது தெரியவந்தது. இதனை யடுத்து பொம்மிடி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதே போன்று அரூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மோப்பிரிப்பட்டி கிராமத்தில் பிரியாணி கடையில் மது வைத்து விற்பதாக அரூர் போலீஸ் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அந்த கிராமத்துக்கு சென்ற போலீசார் பிரியாணி கடையில் சோதனை செய்த போது பதுக்கி வைக்கப் பட்டிருந்த 20 பாட்டில்கள் பறிமுதல் செய்து அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் சத்திய ராஜ் (22) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து அரூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதே போன்று கம்பைநல்லூர் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட இருமத்தூர் பகுதியில் கம்பைநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கே சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் மது பாட்டில் களை பதுக்கி வைத்து விற்றதும், அவர் இருமத்தூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் நவின்குமார் என்பதும் தெரியவந்தது. இதனை யடுத்து அவரை கைது செய்தனர்.
இதே போன்று கோட்டப் பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நரிப்பள்ளி கிராமத்தில் சப்- இன்ஸ் பெக்டர் விஜயன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் மதுப்பாட்டில்களை தனது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அரசின் நலத்திட்டங்களை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தருமபுரி கலெக்டர் தெரிவித்தார்.
- பல்வேறு திட்டங்களை குறித்து விழிப்புணர்வு பெற்று, பயனடைய வேண்டும்.
நவம்பர்– 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி, ஆல மரத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிகுழுக்களை கவுர வித்தல், வடகிழக்கு பரு வமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணை யவழி வீட்டுவரி சொத்து வரி செலுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், கிராம வறுமை குறைப்பு திட்டம் , கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம் , குடிநீர் திட்டம் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பு திட்டம் , கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நிதிசெலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை, மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து இக்கி ராமசபைக் கூட்டத்தில் விவா திக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி பேசியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதிகள், சாக்கடை வசதிகள், சுகாதாரம், கழிப்பிட வசதிகள், கல்வி, மக்களுக்கான பொருளா தார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அத்தகைய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை தங்கள் உள்ளாட்சிகளில் நிறைவேற்றிட முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
மேலும், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து பாது காக்க சுற்றுப்பு றங்களில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துகொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடித்தல், ஆரோக் கியமான உணவினை உட்கொள்ளுதல் போன்ற தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மகளிர் முன்னேற்றத்திற்கும், மக்களின் வாழ்வாதா ரத்திற்கும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை குறித்து விழிப்புணர்வு பெற்று, பயனடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, இக்கிராம சபைக்கூ ட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனா ளிகளுக்கு விசைத்தெளிப்பான், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களை பாராட்டி, பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்.
முன்னதாக, ஆலமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சமையல் கூடம் மற்றும் ஆலமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- தருமபுரியில் தனியார் பஸ்களில் அதிக ஒலிகளை எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை
தமிழகத்தில் இயங்கும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன் மற்றும் பணியார்கள் இன்று மதியம் 12 மணியளவில் தருமபுரி பஸ் நிலையத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அதில் அதிக ஒலிகளை எழுப்பும் 50க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது;- முதல்கட்டமாக தருமபுரி பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து உள்ளோம். தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடக்கும்.
பறிமுதல் நடவடிக்கையை மீறி தொடர்ந்து ஏர் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பாலக்கோடு பகுதியில் ஒயிட் லாங் கத்திரிக்காய் அமோக விளைச்சல் கண்டது.-
- விலை சரிவால் விவசாயிகள் கவலை
தருமபுரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது தற்போது விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், மொரப்பூர், அரூர், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
அதிலும் குறிப்பாக பாலக்கோடு பகுதியை சுற்றியுள்ள பாலக்கோடு, புளிக்கரை, மல்லாபுரம், திருமல்வாடி, கரகூர், பெல்ரம்பட்டி, ஐந்து மைல்கள், அதக்கப்பாடி, பாப்பாரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கிணற்று நீர் பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி, கத்தரி, வெண்டை, குடை மிளகாய், முள்ளங்கி உள்ளிட்டவற்றை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற்போது இப்பகுதியில் வெளிமாநிலம், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒயிட் லாங் கத்தரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளைவிக்கப்படும் கத்தரிக்காய்க்கு கேரள மாநிலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இங்கு அறுவடை செய்யப்படும் கத்தரிக்காய் அனைத்தும் தினமும் 10 டன்னிற்கு மேல் கேரள மாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் விழா காலங்கள் எதுவும் இல்லாததால் விலை குறைந்து உள்ளதாக விவசாயி கவலை தெரி வித்தார்
இதுகுறித்து கத்தரிக்காய் விவசாயி ஒருவர் கூறியதாவது:
ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் வரை செலவு செய்து 3 ஏக்கர் ஒயிட் லாங் கத்தரிக்காய் பயிரிட்டு உள்ளோம். இயற்கை உரங்களான கோழி எருவு பசுமாட்டு எருவு இட்டு நாற்று நட்டு செடிகள் வளரும்போது செடிகளுக்கு இடையில் சவுக்கு கம்புகள் நட்டு அதில் செடிகள் சாயாமல் இருக்க ஸ்டே கம்பிகள் மூலம் செடிகளை கட்டி பாதுகாக்கப்படுகிறது.
60 நாட்களில் அறுவ–டைக்கு தயாராகி விடும் சுமார் 6 மாதம் முதல் 7 மாதம் வரை காய்கள் கிடைக்கும் ஏக்கருக்கு ஒரு வாரத்திற்கு 4 டன் கத்திரிக்காய் அறுவடை செய்யப்படுகிறது. இந்த ஒயிட் லாங் கத்திரிக்காய் தொடர்ந்து பயிரிட்டு வருகிறேன். கடந்த மாதம் வரை கத்திரிக்காய் ஒரு டன் ரூ 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது ஆனால் தற்போது ஒரு டன் ரூ. 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
காய் அறுவடை கூலி, மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல வாகன வாடகை உள்ளிட்டவற்றை ஒப்பந்ததாரர்கள் ஏற்றுக் கொள்வதால் சற்று ஆறுதலாக உள்ளது என தெரிவித்தார்.
- தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஜோதிடரால் பரபரப்பு ஏற்பட்டது.
- அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி சமத்து வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (62). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் இருவரும் ராமகிருஷ்ணனை பிரிந்து பெங்க ளூரில் உள்ளனர். இந்த நிலையில் ராம கிருஷ்ணன் சமத்துவபுரத்தில் ஜோதிடம் பார்த்து வருகிறார்.
ராமகிருஷ்ணனுக்கு காரிமங்கலம் அருகே உள்ள குட்டூரில் சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 10 கோடி என்று சொல்லப்படுகிறது.
சில தினங்களுக்கு முனபு இந்த நிலத்தை அபகரிக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நிலத்தை கொடுக்க மறுத்ததால் என்னை தாக்கினர் என்று காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் காரிமங்கலம் போரீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும் கூறப்ப டுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் கும்பல் ராமகிருஷ்ணனை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார்.
இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ராமகிருஷ்ணன் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த தகவலை அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை சிகிச்சை எடுத்து கொள்ள அறிவுறுத்தினர். இதனை யடுத்து அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (42). இவர் தாசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.
சண்முகம் சொந்த மாடுகளை வளர்த்து வந்தார். அவர் தினமும் தனது வீட்டில் இருந்து ஆதனூர் பகுதியில் உள்ள தனியார் பால் கொள்முதல் நிலையத்திற்கு வந்து பால் ஊற்றி விட்டு பின்னர் வீடு திரும்பி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்க ம்போல் பால் கறந்து அதனை தனியார் பால் கொள்முதல் நிலையத்திற்கு கொடுத்து விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சாலையை கடந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சண்முகம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சண்முகத்தை மீட்டு அவசர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரூரில் சரக அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
- மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு
தருமபுரி மாவட்டம் , அரூர் அருகே உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் சரக அளவி லான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அரூர் சரக அளவில் நடைபெற்ற வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், செஸ், குத்துச்சண்டை, தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் 150- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விளையாடி முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்து மாவட்ட மாநில அளவிலான போட்டி களுக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் குண சேகரன் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார். தலைமை ஆசிரியர் செல்வம், உதவி தலைமை ஆசிரியர் கைலாசம் மணி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- சாமனூர், படகாண்ட அள்ளி, கொக்கிகல் பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் அதிகபடியாக உள்ளது. அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமத்திற்குள் யானை, மான், சிறுத்தை, காட்டு பன்றி உள்ளிட்டவைகள் வந்து பயிர்களையும், கால்நடைகளையும் சேதப்படுத்துவது வழக்கம். வனத்துறையினர் அவ்வாறு வரும் விலங்குகளை வனத்திற்குள் விரட்டி அடித்து வருகின்றனர்.
மாரண்டஅள்ளி அடுத்த மலைப்பகுதியை ஒட்டி சாமனூர், படகாண்டஅள்ளி, கொக்கிகல் கிராமங்கள் உள்ளது. கிராமத்தில் மலை பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு ஒன்று நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணிகளை கடித்து வந்தது. திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்தை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து பார்த்துள்ளனர். அதனை உற்று பார்த்த போது அது சிறுத்தை என தெரியவந்துள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதும் செல்போனில் பதிவான காட்சிகள் குறித்து தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து சாமனூர், படகாண்ட அள்ளி, கொக்கிகல் பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள கொக்கிகல், சாமனூர், படகாண்டஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் நேற்று ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை சிறுத்தையால் வளர்ப்பு பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும். பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவது, உபாதைகள் கழிப்பதற்காக வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது, கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்க வேண்டும் என்று கூறினர்.
அதேபோல் வனவிலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சார வேலிகள் அமைப்பது, நாட்டு வெடிகுண்டுகள் வைப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.
அப்போது வனத்துறையினரிடம் தெரிவித்த பொதுமக்கள் கிராமத்திற்குள் இதுவரை சிறுத்தை வரவில்லை எனவும் எந்த கால்நடைகளையும் இதுவரை சேதப்படுத்தவில்லை கிராமத்தை ஒட்டி சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அச்சமாக உள்ளது என தெரிவித்தனர்.






