search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசிய போது எடுத்த படம்.

    உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

    • தருமபுரியில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,
    • ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது.

    உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. நல்லம்பள்ளி, பென்னாகரம் மற்றும் அரூர் ஒன்றியத்தில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது.

    அலுமினிய பாக்கெட்கள், அனுமதிக்கப்பட்ட உணவு கொள்கலன்கள், நுகர்வோர் பாத்திரங்கள்ஆகியவற்றில் மட்டுமே உணவு பொருட்கள் வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப்பை களில் உணவு பொருட்களை வழங்கக்கூடாது.

    பான்மசாலா குட்கா விற்பனை மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்கும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிக்க, தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்பட பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.

    இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நிறமி சேர்க்கக்கூடாது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இயங்கும் வெளிப்புற கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 100 சதவீதம் புகையிலை பொருட்களை தடை செய்யப்பட வேண்டும்.

    மேலும் கடத்தூர் பகுதிகளில்புகையிலை பொருட்கள் குறித்து அதிகளவு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும், Tn Food Safety Consumer App செயலிக்கும் மற்றும் foodsafety.tn.gov.in இணைய தளத்திலும் தெரி விக்கலாம்.

    இக்கூட்டத்தில் உணவு பாதுகா ப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா, துணை இயக்குநர், ஜெயந்தி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிமேகலை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராமதாஸ், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள்) பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்,குமணன், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சி.கந்தசாமி, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகரவர்த்தகர் சங்கம், விநியோகிப்பாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×