என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசின் நலத்திட்டங்களை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்
- அரசின் நலத்திட்டங்களை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தருமபுரி கலெக்டர் தெரிவித்தார்.
- பல்வேறு திட்டங்களை குறித்து விழிப்புணர்வு பெற்று, பயனடைய வேண்டும்.
நவம்பர்– 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி, ஆல மரத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிகுழுக்களை கவுர வித்தல், வடகிழக்கு பரு வமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணை யவழி வீட்டுவரி சொத்து வரி செலுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், கிராம வறுமை குறைப்பு திட்டம் , கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம் , குடிநீர் திட்டம் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பு திட்டம் , கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நிதிசெலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை, மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து இக்கி ராமசபைக் கூட்டத்தில் விவா திக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி பேசியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதிகள், சாக்கடை வசதிகள், சுகாதாரம், கழிப்பிட வசதிகள், கல்வி, மக்களுக்கான பொருளா தார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அத்தகைய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை தங்கள் உள்ளாட்சிகளில் நிறைவேற்றிட முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.
மேலும், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து பாது காக்க சுற்றுப்பு றங்களில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துகொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடித்தல், ஆரோக் கியமான உணவினை உட்கொள்ளுதல் போன்ற தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மகளிர் முன்னேற்றத்திற்கும், மக்களின் வாழ்வாதா ரத்திற்கும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை குறித்து விழிப்புணர்வு பெற்று, பயனடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, இக்கிராம சபைக்கூ ட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனா ளிகளுக்கு விசைத்தெளிப்பான், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களை பாராட்டி, பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்.
முன்னதாக, ஆலமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சமையல் கூடம் மற்றும் ஆலமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






