என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக சரிவு
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக சரிவு

    • ஒகேனக்கலில் நீர் வரத்து 4 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
    • அருவிகளில் தண்ணீர் சீறாக பாய்ந்து ஓடுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி–களில் பெய்யும் மழையை பொறுத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வ ரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் கடந்த 9 தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் சரிந்து 4 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதன்காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறாக பாய்ந்து ஓடுகிறது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×