என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தர்மபுரி கலெக்டர் அலுவகம் அருகே  நடப்போம், நலம் பெறுவோம்  திட்டப் பணி ஏற்பாடுகள் தீவிரம்
    X

    தர்மபுரி கலெக்டர் அலுவகம் அருகே நடப்போம், நலம் பெறுவோம் திட்டப் பணி ஏற்பாடுகள் தீவிரம்

    • நிழற்கூடம், குடிநீர் , மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
    • அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

    தொப்பூர்,

    தமிழக அரசின், பொது சுகாதார துறை சார்பில், நல்லம்பள்ளி அருகே தர்மபுரி கலெக்டர் பங்களா முதல் தடங்கம் மேம்பாலம் வரை, 8 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்,

    நடப்போம், நலம்பெறுவோம் என்ற திட்டப் பணியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார். இதற்க்காக 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்காக, ஒவ்வொரு கிலோ மீட்டர் இடையே, ஒய்வு நிழற்கூடம், குடிநீர் வழங்கும் இடங்கள் மற்றும் மரம் இல்லாத இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடு பணிகளை, சம்மந்தப்பட்ட துறையினர், தீவிரமாக செய்து வருகின்றனர், இவ்வாறு நடந்து வரும் இப்பணிகளை, தர்மபுரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெயந்தி , தர்மபுரி கலெக்டர் பங்களா பின்புற சாலைப் பகுதியில், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உடன் துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் சக்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வாசுதேவன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், லோகநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்,

    Next Story
    ×