என் மலர்
தர்மபுரி
- வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கதிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது33). இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மாணிக்கத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு சந்தியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தனிமையில் தவித்த மாதேஷ் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு வர மறுத்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட மாதேஷ் கடந்த 4-ந்தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாதேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகேந்திரன், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் வர மறுத்துள்ளார்.
- கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வள்ளூவர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது45). இவரது மனைவி மீனா. இவர்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லை. இந்த நிலையில் மகேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனவைிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு மீனா சென்றுள்ளார். இதனால் தனிமையில் தவித்த மகேந்திரன், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் வர மறுத்துள்ளார்.
இதில் மனமுடைந்து காணப்பட்ட மகேந்திரன் கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மகேந்திரன் உயிரிழந்தார்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரியில் அன்னாசி பழம் படுஜோராக விற்பனை செய்யப்படுகிறது.
- எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசி பழமானது அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும்.
தருமபுரி,
தருமபுரியில் மார்க்கெட் ரோடு, பென்னாகரம் சாலை, கலெக்டர் அலுவலகம், உள்ளிட்ட பல பகுதிகளில் கொல்லிமலை அன்னாசி பழம் படுஜோராக விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொல்லிமலை, ஏற்காடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் அதிகபடியாக அன்னாசி பழம் சாகுபடி செயல்படுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவு செய்யப்படுகிறது.
அதே ஜூன், ஜூலையில் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு வருட பயிரான இவற்றில் பல நன்மைகள் உள்ளதாகவும், அதேபோல் அதிகளவு எடுத்துக் கொண்டால் தீமைகளையும் விளைவிக்கும் என மருத்துவர்களும் இயற்கை மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.
பிரேசில், பராகுவே ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டதாகவும். அன்னாசியில் வைட்டமின் ஏ.பி.சி ஆகிய உயிர்ச்சத்துகள் நிறைந்துள்ளதாகவும், பொட்டாசியம், கால்சியம், மினரல்ஸ் போன்ற முக்கியச் சத்துகளும், இதில் அடங்கி யுள்ளதாக தெரிவிக்கின்றனர். கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள அன்னாசியில் புரதம் மற்றும் இரும்புச்சத்துகளும் உள்ளன.
100 கிராம் அன்னாசிப்பழத்தில் 88 சதவிகிதம் ஈரப்பதமும், 0.5 சதவிகிதம் புரதமும், 10.8 சதவிகிதம் மாவுச்சத்தும் 17 சதவிகிதம் கொழுப்புச்சத்தும் 63 மில்லி கிராம் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அன்னாசிப் பழத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும். சிலருக்கு நிற்காமல் தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஒரு சங்கு (பாலாடை) அளவுக்கு அன்னாசிப்பழச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்தினால் குணமாகும். மலச்சிக்கல் தீர இதே கலவையை இரண்டு மடங்கு அதிகமாக அருந்தினால் பிரச்னை நீங்கும்.
எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசி பழமானது அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும். சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு அழகு, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடையைப் பெறலாம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அன்னாசி பழங்களை தற்போது தருமபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பார் உரிமையாளர் வாங்கும் மது பாட்டில்களுக்கும் குவாட்டருக்கு 5 ரூபாயும் பீர் பாட்டில் ஒன்றிற்கு பத்து ரூபாயும் கட்டாய வசூல் செய்வதாக புகார் தெரிவித்தார்.
- இது சம்பந்தமாக தருமபுரி டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார்.
தருமபுரி,
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதற்குரிய அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் கடைகளில் மது பாட்டில்களின் விலைப்பட்டியலை பட்டியலிடுவதற்கு முன் பகுதியில் கட்டாயம் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் அமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவாட்டருக்கு 5 ரூபாய் பீர்பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் மதுபாட்டில்களை வாங்கும் போது பாட்டிலின் விலையை விட கூடுதலாக பணம் வாங்குவதால் மது பிரியர்கள் பணத்தை கொடுத்து விட்டு மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.
தருமபுரி அடுத்த பாலக்கோடு சாலை சோகத்தூர் பகுதியில் இரண்டு அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த கடையை ஒட்டி இடத்தின் உரிமையாளர் பார் நடத்தி வருகிறார்.
பார் உரிமையாளர் வாங்கும் மது பாட்டில்களுக்கும் குவாட்டருக்கு 5 ரூபாயும் பீர் ஒன்றிற்கு பத்து ரூபாயும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எதிர்பாரா தவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் அங்கமுத்து தவறி விழுந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மாட்டியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது73). இவர் கொளகத்தூரில் உள்ள ஆசைதம்பியின் புதிய வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாரா தவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் அங்கமுத்து தவறி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாழ்வான பகுதியாக மின்கம்பத்தில் இருந்து மின்சார வயர்கள் தொங்கி கிடப்பதால் பேருந்தில் உரசும் அபாயம் உள்ளது.
- உடனடியாக மின்சார வாரியம் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர இழுத்து கட்ட வேண்டும்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பேருந்து நிலையத்தை அகற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு தற்போது ரூபாய் 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்காலிக பேருந்து நிலையமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது.
அங்கு காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள் என சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
தருமபுரியில் இருந்து வரும் பேருந்துகள் ஒகேனக்கல் புறவழிச் சாலையாக வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வரும்போது அலுவலகத்திற்கு முன்பு தாழ்வான பகுதியாக மின்கம்பத்தில் இருந்து மின்சார வயர்கள் தொங்கி கிடப்பதால் பேருந்தில் உரசும் அபாயம் உள்ளது.
இதனால் பேருந்தில் மின்சாரம் பாய்ந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை உடனடியாக மின்சார வாரியம் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர இழுத்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றன.
- எங்கள் கிராமத்திற்கு வரும் தார் சாலை குண்டும் குழியுமாக சிதிலமடைந்துள்ளது.
- அதிகளவில் பள்ளம் தோன்டி கிராவல் மண் எடுப்பதால் மழைக்காலங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது மல்லிக்குட்டை பஞ்சாயத்து.
இந்த பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஏரியில் இரண்டு நாட்களாக அதிக பாரம் ஏற்றும் டிப்பர் லாரிகளில் ஏரிகளில் இருந்து கிராவல் மண் எடுத்துச் செல்லப்பட்டது.
இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று பொக்லிங் எந்திரம் மற்றும் டிப்பர் லாரிகளை சிறை பிடித்தனர்.
இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறும்போது இரண்டு நாட்களாக அதிக பாரம் ஏற்றும் டிப்பர் லாரிகளில் ஏரியிலிருந்து கிராவல் மண் கடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து டிப்பர் லாரி உரிமையாளரிடம் கேட்டால் அரசு அனுமதியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஓசூர்-அதியமான் கோட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்துச் செல்கின்றோம் என்று தெரிவிக்கின்றனர்.
மண் எடுப்பதற்கான அனுமதி சீட்டு இல்லாமல் எடுத்துச் செல்கின்றனர். மேலும் ஏரியில் குறிப்பிட்ட அனுமதியை விட 20 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி மண் எடுக்கப்பட்டதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 5 ஆயிரம் லோடுகளுக்கு மேல் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் எங்கள் கிராமத்திற்கு வரும் தார் சாலை குண்டும் குழியுமாக சிதிலமடைந்துள்ளது.
அதிகளவில் பள்ளம் தோன்டி கிராவல் மண் எடுப்பதால் மழைக்காலங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மல்லிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பஞ்சாயத்து தலைவர், ஊர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து வழக்கம் போல் டிப்பர் லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- சொத்து பிரச்சினைகள், வழிப்பாதை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மொத்தம் 97 மனுக்கள் பெறப்பட்டன.
- இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் 28 மனுக்கள் வழங்கப்பட்டன.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
இதில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.
இதேபோல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்ககோவன், ராமச்சந்திரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர்.
இந்த முகாமில் நிலப்பிரச்சினைகள், சொத்து பிரச்சினைகள், வழிப்பாதை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மொத்தம் 97 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து 97 மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்பட்டது.
இதேபோல் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் 28 மனுக்கள் வழங்கப்பட்டன.
இந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது வகுப்பறையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.
- மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளி மாணவர்களின் வகுப்பறையில் மேல் பகுதி பக்கவாட்டு சுவர்களில விரிசல்களில் லேசான மழைக்குக்கூட தாக்கு பிடிக்காமல் பழுதடைந்த கட்டிடம் உள்ளது.
இந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது வகுப்பறையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.
இதனால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர். இவற்றை முறையாக சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு முறை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கல்வி துறை அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள கிராமபகுதி மாணவ, மாணவியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கும்பிஷேக விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பச்சைவீட்டு கொட்டாயில் பட்டாளம்மன், முத்தாலம்மன், கரிவேட்ட ராயசாமி கோவில், பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கோவில் கும்பிஷேக விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.
தொடர்ந்து தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் பட்டாளம்மன், முத்தாலம்மன், கரிவேட்டராயசாமி கோவில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை அர்ச்சகர்கள் வெகுவிமர்சையாக நடத்தி வைத்தனர்.
பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பச்சைவீட்டுக்கொட்டாயில், தண்டுகாரம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- செல்வம் இறந்துவிட்ட நிலையில் சின்னவள் மனமுடைந்து காணப்பட்டார்.
- சின்னவள் நேற்று பூச்சி மருந்து குடித்து விட்டு தனது கணவரின் கல்லறையில் படுத்து மயங்கி விழுந்து கிடந்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள பச்சியப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சின்னவள் (வயது50).
இந்த நிலையில் செல்வம் இறந்துவிட்ட நிலையில் சின்னவள் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் உறவினர்கள் ஆறுதல் கூறியுள்ளனர். சின்னவள் ஏரி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
ஆனாலும் தனது கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட சின்னவள் நேற்று பூச்சி மருந்து குடித்து விட்டு தனது கணவரின் கல்லறையில் படுத்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 7-ந் தேதி பத்மாவதி மறுவீட்டுக்கு அழைப்பு காரணமாக தாய் வீட்டிற்கு வந்தார்.
- பதறிப்போன தந்தை மாது, தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் சிங்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மகள் பத்மாவதி (வயது19). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த மாதம் 29-ந் தேதி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பத்மாவதி மறுவீட்டுக்கு அழைப்பு காரணமாக தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன தந்தை மாது, தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து மாது மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தனது மகளை பந்தாரஅள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னா மகன் சக்திவேல் என்பவர் அழைத்து சென்றிருக்கலாம் என்றும், அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த அருள், முனீஸ்வரி, ராணி, பழனி, திட்டப்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி ஆகிய 5 பேரும் உடந்தையாக உள்ளனர் என்றும் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சக்திவேல் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 12 நாட்களில் புதுப்பெண் மாயமான சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






