என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலிபேஸ்ட் தின்று தொழிலாளி தற்கொலை
    X

    எலிபேஸ்ட் தின்று தொழிலாளி தற்கொலை

    • மகேந்திரன், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் வர மறுத்துள்ளார்.
    • கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வள்ளூவர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது45). இவரது மனைவி மீனா. இவர்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லை. இந்த நிலையில் மகேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனவைிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு மீனா சென்றுள்ளார். இதனால் தனிமையில் தவித்த மகேந்திரன், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் வர மறுத்துள்ளார்.

    இதில் மனமுடைந்து காணப்பட்ட மகேந்திரன் கடந்த 7-ந்தேதி அன்று வீட்டில் எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மகேந்திரன் உயிரிழந்தார்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×