என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • நேரடி ஒளிபரப்பினை கடந்த 3-ந் தேதி அன்று தருமபுரி நகர பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
    • பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் போட்டிகளை கண்டு ரசித்தனர்.

    தருமபுரி,

    7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி கோப்பை போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதன் நேரடி ஒளிபரப்பினை கடந்த 3-ந் தேதி அன்று தருமபுரி நகர பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் நேற்று தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் பி.சுப்பிரமணி, தருமபுரி மாவட்ட வாலிபால் சங்க தலைவர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கொரியா மற்றும் சீனா அணிகளுக்கிடையிலான நடந்த ஆக்கி போட்டியை பஸ் நிலையத்தில் உள்ள பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பை கண்டு ரசித்தனர்.

    மேலும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் போட்டிகளை கண்டு ரசித்தனர்.

    • ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • மொத்தம் ரூ.13 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என வியா–பாரிகள் தெரிவித்தனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்த சந்தையில் வாரந்தோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட கடைகள் போடப்படுகிறது.

    இங்கு நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும், விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    நேற்று நடந்த சந்தையில் 310-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு ஆடு விலை ரூ. 5,000 முதல் ரூ.10,200 வரையும் விற்பனையானது, மொத்தம் ரூ.13 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.
    • விண்ணப்பித்து தொழிற்பிரிவு கிடைக்கப்பெறாதவர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து பயனடையலாம்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் இவ்வாண்டிற்கான நேரடிசேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் தருமபுரி மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் அரூரில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு சேர்க்கைக்கு முதல் கட்ட சேர்க்கை நடைபெற்றதில் தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கைக்கு 31.7.2023 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் சேர்க்கை சதவீதம் குறைவாக உள்ளதால் அதனை அதிகரித்துடும் பொருட்டு நேரடி சேர்க்கை 16.8.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை.

    2021ல் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம். கீழ்க்காணும் தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் சேர்க்கையில் கலந்துகொள்ளலாம்.

    தருமபுரி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளான கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (கோபா) (1வருடம்), கட்டடபட வரைவாளர் (2வருடம்), பொருத்துநர் (2வருடம்), கம்மியர் மோட்டார் வண்டி (2வருடம்), கம்மியர் டீசல் (1வருடம்) மற்றும் எந்திர வேலையாள் (2வருடம்).

    இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேனுபேக்ட்சரிங் டெக்னீசியன் (1 வருடம்), பேசிக் டிசைனர் - விர்ச்சிவல் வெரிபையர் (2 வருடம்)

    அரூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளான பொருத்துநர் (2 வருடம்), ரெப்ரிஜிரேசன் ஏர் கண்டீசனிங் டெக்னீசியன் ( 2 வருடம்), மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் ( 1வருடம்).

    சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

    ஒரிஜினல் 10-ம் வகுப்பு மார்க் சீட், ஒரிஜினர் டி.சி. சாதி சான்று, ஆதார் அட்டை, அலைபேசி எண்கள், மார்பளவு புகைப்படம்.-1, e mail ID மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.50- சேர்க்கை கட்டணம் ரூ.195- (அ) ரூ.185

    எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து தொழிற்பிரிவு கிடைக்கப்பெறாதவர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப்பித்து பயனடையலாம்.

    விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்ய தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு - 9445803042, 9361745995, 9894930508 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தருமபுரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.
    • வான்மதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி, 

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனின் அக்கா பானுமதி (எ) வான்மதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தருமபுரி மத்திய மாவட்ட மற்றும் தருமபுரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

    இதில் தருமபுரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட பொருளாளர் மன்னன், மண்டல துணைச் செயலாளர் மின்னல் சக்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பானுமதி (எ) வான்மதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த நினைவேந்தர் நிகழ்ச்சியில் ஏ.மாது (எ) மணிமாறன், நகர துணை செயலாளர் வடிவேலு உமாசங்கர் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மாது தலைமை வகித்தார்.
    • புற ஆதார முறையில் பணி நியமனம் செய்யும் அரசாணை 115 ஐ திரும்ப பெற வேண்டும்.

    தருமபுரி,

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தருமபுரி மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட பேரவை ஆலோசனைக் கூட்டம் தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் மாது தலைமை வகித்தார்.

    இதில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். காலி பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். புற ஆதார முறையில் பணி நியமனம் செய்யும் அரசாணை 115 ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கனகவல்லி, ராஜேஸ்வரி, வெங்கடேசன் மாநில பொருளாளர் சேரநாதன், மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாநில பொருளாளர், ராஜா மாவட்ட தலைவர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கோவிந்தராஜ், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்கம் தமிழ்ச்செல்வி, மாநில தலைவர் ராஜசேகர், மாநில செயலாளர், தேன்மொழி மாவட்டத் துணைத் தலைவர், ஜெயலட்சுமி நாராயணன், மாநில பொது செயலாளர் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • பாப்பிரெட்டிப்பட்டி பகுதி பூதநத்தம் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ராமரை போலீசார் கைது செய்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,  

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் செந்தில்குமார், வனக்காப்பாளர் முருகன் மற்றும் வனக்குழுவினர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதி பூதநத்தம் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பட்டா நிலத்தில் மின் இணைப்பு எடுத்து வன உயிரினங்களை வேட்டையாட முயற்சி செய்த மெனசி சேர்ந்த ராமர்(53) என்பவரை பிடித்து மாவட்ட வன அதிகாரி அப்பாலாநாயுடு முன்னர் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

    அவர் ராமரை வனவிலங்குகளை வேட்டையாட முயற்சித்த குற்றத்திற்காக கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • சக்தி அழைத்தலும், மகா கும்ப பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    தருமபுரி, 

    தருமபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் ஆடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பச்சையம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    தொடர்ந்து ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சக்தி அழைத்தலும், மகா கும்ப பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பச்சையம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.

    • வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியாததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
    • வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலை நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரூர்,  

    தருமபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்படும் கரும்புகளை கோபாலபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் ஒப்பந்தம் செய்து அரவைக்கு அனுப்பு கின்றனர்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக நல்ல மழை பெய்ததால், கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில், கரும்பு பயிரில் வேர்ப்புழு தாக்குதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    நடுப்பட்டி, ஆவாலம்பட்டி, தாசரஹள்ளி, மொரப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில், கரும்பு பயிர்களில் வேர்ப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. கரும்பு சோகை மஞ்சள் நிறமடைந்து வாடி சருகு போன்று மாறிவிடுகிறது.

    புழுக்கள் கரும்பின் ஆதார வேர்களை தாக்கி உண்பதால் குருத்து பகுதி முழுவதும் காய்ந்துவிடுவதால் வேர் மற்றும் அடிக்குருத்து பகுதியில் பெருமளவில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால், மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியாததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஆலை நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை குருமன்ஸ் இன மக்கள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    தருமபுரி,  

    தருமபுரி அருகே திப்பிரெட்டிஅள்ளியில் வீரபத்திர சாமி கோவில் ஆடித்திருவிழா சாமி கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும், சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது.

    பின்னர் விநாயகர், முருகன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து காட்டு கோவில் பெரியசாமி, காளியம்மாள் மற்றும் மூலமாளம்மாள் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான நேற்று பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கோவில் பூசாரி சிறப்பு பூஜைகள் செய்து தேங்காய் உடைக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

    மேலும் சில பக்தர்கள் அழகு குத்தியும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீரபத்திர சாமிக்கு சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கும் விழாவும், நாளை (திங்கட்கிழமை) பொங்கல் வைக்கும் விழாவும், வீரபத்திர சாமி கோவில் திரும்பும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை குருமன்ஸ் இன மக்கள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • திடீரென ஏலம் அறிவித்தால் விவசாயம் பாதிக்கும் என்பதால் சற்று கால அவகாசம் கேட்டு ஏலத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
    • போலீசார் பரமஞானத்தை கைது செய்து சிறையில் அடை த்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி, 

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சுக்கனஅள்ளியை சேர்ந்த விவசாயி நந்தகுமார் (வயது36), இவர் அப்பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் மானிய நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

    கடந்த மாதம் 27-ந் தேதி கோவில் நிலம் ஏலம் விடுவதாக அறங்காவல் துறை வருவாய் ஆய்வாளர் துரை அறிவித்தார்.

    பட்டாளம்மன் கோவில் வளாகத்தில் ஏலம் நடைபெற்ற போது நந்தகுமார் தற்போது நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளதாகவும், திடீரென ஏலம் அறிவித்தால் விவசாயம் பாதிக்கும் என்பதால் சற்று கால அவகாசம் கேட்டு ஏலத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த பரமஞானம் (56), ராஜன் (67) நாராயணன் (50), முருகேசன் (47) ஆகியோர் கூட்டாக சேர்ந்து தாக்கியதில் நந்தகுமார் பலத்த காயமடைந்தார்.

    அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து நந்தகுமார் மாரண்டஅள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பரமஞானத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • தனது தம்பி மனைவியிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.
    • பெண்ணிடம் கணவரின் அண்ணன் தகாத முறையில் நடக்க முயன்றதோடு மிரட்டல் விடுத்தாராம்.

    ஏரியூர், 

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணின் கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே அதே கிராமத்தில் பெண்ணின் கணவருடைய அண்ணன் கடந்த 3 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் தனது தம்பி மனைவியிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.

    நேற்று வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கணவரின் அண்ணன் தகாத முறையில் நடக்க முயன்றதோடு மிரட்டல் விடுத்தாராம்.

    இதுகுறித்து அப்பெண் பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தம்பி மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவரை கைது செய்தனர்.

    • காதார வளாகம் 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், புதர் மண்டி காட்சி அளிக்கிறது.
    • உணவு தானியங்களை வாகனத்தில் கொன்டு செல்ல முடியாமல் தலை மேல் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட அமானி மல்லாபுரம் ஊராட்சியில் உள்ள உப்பாரஅள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

    மேலும் இக்கட்டிடத்திற்கு அருகே ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் உள்ளது.சுகாதார வளாகம் 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், புதர் மண்டி காட்சி அளிக்கிறது. பராமரிப்பு இன்றி உள்ள இந்த சுகாதார கட்டிடத்தின் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் நல சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் சிமெண்ட் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு சாலையின் குறுக்கே கற்களை வைத்து ஆக்கிரமித்து செய்து வருகின்றனர்.

    மேலும் சாலையின் நடுவே சிமெண்ட் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்வதிலும், அங்கன்வாடி மையத்திற்க்கு அரசு வழங்கும் உணவு தானியங்களை வாகனத்தில் கொன்டு செல்ல முடியாமல் தலை மேல் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×