என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் சிறையில் அடைப்பு
    X

    நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் சிறையில் அடைப்பு

    • திடீரென ஏலம் அறிவித்தால் விவசாயம் பாதிக்கும் என்பதால் சற்று கால அவகாசம் கேட்டு ஏலத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
    • போலீசார் பரமஞானத்தை கைது செய்து சிறையில் அடை த்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சுக்கனஅள்ளியை சேர்ந்த விவசாயி நந்தகுமார் (வயது36), இவர் அப்பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் மானிய நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

    கடந்த மாதம் 27-ந் தேதி கோவில் நிலம் ஏலம் விடுவதாக அறங்காவல் துறை வருவாய் ஆய்வாளர் துரை அறிவித்தார்.

    பட்டாளம்மன் கோவில் வளாகத்தில் ஏலம் நடைபெற்ற போது நந்தகுமார் தற்போது நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளதாகவும், திடீரென ஏலம் அறிவித்தால் விவசாயம் பாதிக்கும் என்பதால் சற்று கால அவகாசம் கேட்டு ஏலத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த பரமஞானம் (56), ராஜன் (67) நாராயணன் (50), முருகேசன் (47) ஆகியோர் கூட்டாக சேர்ந்து தாக்கியதில் நந்தகுமார் பலத்த காயமடைந்தார்.

    அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து நந்தகுமார் மாரண்டஅள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பரமஞானத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×