என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    செங்கல்பட்டு:

    மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி துவங்குகிறது. இதில் 188 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு செங்கல்பட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஆட்சியர் ராகுல் நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • செஸ் ஒலிம்பியாட்" போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி துவங்குகிறது.
    • கோவளம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள கடலோர பகுதியை தூய்மையாக வைக்க அரசு முடிவு

    மாமல்லபுரம்:

    பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் இருவரும் கடந்த 2019ம் ஆண்டு மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அப்போது கோவளத்தில் தங்கியிருந்த மோடி அப்பகுதி கடற்கரை ஓரத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினார். அந்த புகைப்படம், வீடியோக்கள் வைரலாகி கோவளம்-மாமல்லபுரம் கடற்கரை சர்வதேச கவனம் பெற்றது.

    தற்போது "செஸ் ஒலிம்பியாட்" போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி துவங்குகிறது. இதில் 188 நாடுகளில் இருந்து வீரர்கள் வருகிறார்கள். போட்டியை பார்வையிட மத்திய அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அதிபர்கள் வரலாம் என கூறப்படுகிறது. இதற்காக கோவளத்தில் 2019ல் மோடி தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் ரூம்கள் அனைத்தும், அரசு முன் பதிவு செய்து வைத்துள்ளது. அதனால் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள கடலோர பகுதியை தூய்மையாக வைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் "தூய்மையான கடல் மற்றும் கடற்கரை பகுதி பிளாஸ்டிக் இல்லாத பெருங்கடல்" என்ற தலைப்பில் கடலோரத்தை தூய்மையாக வைத்திட ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா திடக்கழிவு மேலான்மை திட்டத்தின் மூலம் கிழக்கு கடற்கரை சாலை சோழிங்கநல்லூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 35 கி.மீ., தூரத்தின் இடையில் உள்ள பனையூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சின்னாடி, கோவளம், பட்டிபுலம், நெம்மேலி, வடநெம்மேலி, திருவிடந்தை, முட்டுக்காடு, கானத்தூர், தேவநேரி, வெண்புருஷம் ஆகிய 13 மீனவ கிராமத்தில் உள்ள 8555 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, திட்டத்தின் பங்குதாரர்கள், மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் கிராமத்தின் வார்டு உறுப்பினர்களுக்கு மாமல்லபுரத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது.

    • ஆளவந்தார் உறவினர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் பலர் புதிய மண்டபம் கட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழியுறுத்தி வந்தனர்.
    • அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கோவிலை ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு 1,054 ஏக்கர் நிலமும், மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் வருமானமும் வருகிறது. அதை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்து வருகிறது. 1967ல் நெம்மேலி கடற்கரை பகுதியில் அவருக்கு கட்டப்பட்ட கோவில் மண்டபம் பழுதடைந்து விழும் நிலையில் இருந்தது.

    ஆளவந்தார் உறவினர்கள், ஆன்மீக ஆர்வலர்கள் பலர் புதிய மண்டபம் கட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழியுறுத்தி வந்தனர். இதையடுத்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கோவிலை ஆய்வு செய்தனர்.

    இதை அடுத்து அரசு 90 லட்சம் ரூபாய் மதிப்பில் பாறை கற்களால் கோவில் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. பழைய கோவிலை இடித்து புதிய கோவில் கட்டுவதற்காக பழைய கோவிலை இடிக்கும் பணியை இந்து அறநிலையத்துறை துவங்கியது.

    மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

    வண்டலூர்:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள 18 நகராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் என் குப்பை என் பொறுப்பு பணிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்று முதல் 8 இடங்களை பிடித்த நகராட்சிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் லட்சுமி, நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு ஓவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற திருவேற்காடு நகராட்சி பகுதியை சேர்ந்த மாணவி ஷ்ரவந்திகாவிற்கு ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை எம்.எல்.ஏ. வழங்கினார். இதேபோல 2-ம் இடம் பெற்ற திருவள்ளூர் நகராட்சி சேர்ந்த மாணவி அக்ஷயாவுக்கு ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ், 3-ம் இடம் பெற்ற பூவிருந்தவல்லி நகராட்சியை சேர்ந்த மாணவிக்கு ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ், ஆறுதல் பரிசு பெற்ற மதுராந்தகம், மறைமலைநகர், வடலூர், திருநின்றவூர், செங்கல்பட்டு, ஆகிய நகராட்சிகளை சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், துப்புரவு ஆய்வாளர் ஆர்.சிவமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்.
    • சசிகுமார், பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் அதே பகுதி, பெரியநகர் மெயின் ரோட்டில் பால் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிசென்றார். இன்று அதிகாலை கடைக்கு வந்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பால் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்ட வேண்டிய ரூ. 5 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. மேலும் சசிகுமார் கடையில் வைத்திருந்த ஒன்றரை சவரன் நகையையும் கொள்ளையர்கள் திருடி சென்று இருந்தனர்.

    இது குறித்து சசிகுமார், பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருக்கழுகுன்றம். பரமசிவம் நகரை சேர்ந்த அன்பழகன். இவரது மகன் முருகன்(வயது25).

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம். பரமசிவம் நகரை சேர்ந்த அன்பழகன். இவரது மகன் முருகன்(வயது25). திருக்கழுகுன்றம் பேரூராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் இருந்து பஸ், கார்களில் வந்து அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
    • மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென முன்னாள் சென்ற லாரி மீது மோதியது.

    மதுராந்தகம்:

    சென்னை வானரகத்தில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து பஸ், கார்களில் வந்து அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும் பெரும்பாலான தொண்டர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.

    கரூர் மாவட்டம், கடவூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் செந்தில்குமார் (வயது 40) உள்பட 5 பேர் நேற்று இரவு காரில் கரூர் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர். மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென முன்னாள் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரில் இருந்த செந்தில்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் இருந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான செந்தில் குமாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இதேபோல் நேற்று காலை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை மாவட் டம் உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் வந்த வேன் மேல்மருவத்தூர் அருகே இரட்டை ஏரிக்கரையில் வந்தபோது லாரி மோதி விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • 25 ஊழியர்களுடன் இயங்கி வரும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்காக பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

    போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியில், தற்காலிகமாக 25 ஊழியர்களுடன் இயங்கி வரும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அங்கு வீரர்களுக்கான விசா, பயணதிட்டம், விளையாட்டு வீரர்கள் எந்தெந்த நாட்டு வீரர்களுடன் போட்டி? நடுவர்கள் யார்? என்பது போன்ற முக்கிய அலுவலக பணிகள் நடந்து வருகிறது.

    நேற்று முன்தினம் தலைமை செயலர் வெ.இறையன்பு போட்டிக்கான அனைத்து ஏற்பாடு மற்றும் போட்டி நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது தாமதமாக நடக்கும் புதிய அரங்கம் அமைக்கும் பணிகளை வேகமாக செய்து முடிக்க அறிவுறுத்தி சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை 11.30 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் "செஸ் ஒலிம்பியாட்" போட்டிக்காக மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்ய வந்தார்.

    அவர் போட்டி நடை பெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்க்கு சென்று அங்குள்ள வளாகத்தில் அமைக்கப்படும் புதிய அரங்கத்தை பார்வையிட்டார். மேலும் போட்டி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அங்குள்ள அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒருங்கிணைப்பு குழுவுடன் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்ய நாதன், தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு, உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்.
    • போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வந்தது.

    தாம்பரம்:

    பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். 45 வயதான இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு பொழிச்சலுர் பழைய பாபா தெருவில் வைத்து பாண்டியனுடன், 2 பேர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் பாண்டியன் கத்தியால் குத்தப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள். அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு பாண்டியன் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்த சங்கர்நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை வழக்கு பதிவு செய்து கொலை நடைபெற்ற இடத்துக்கு நேரில்சென்று விசாரித்தனர்.

    அப்போது பாண்டியனை அவரது நண்பரான சிரஞ்சீவி, மற்றும்அரி ஆகியோர் குத்திக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வந்தது.

    கொலையுண்ட பாண்டியன், சிரஞ்சீவியின் மனைவியை பற்றி நேற்று முன்தினம் இரவு தவறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பாண்டியன், சிரஞ்சீவியின் வீட்டுக்கு கத்தியுடன் சென்று தகராறு செய்ததாக தெரிகிறது.

    அப்போது வீட்டில் இருந்த சிரஞ்சீவியின் மனைவி இதுபற்றி கணவர் வந்தவுடன் தெரிவித்துள்ளர். இதனால் ஆத்திரம் அடைந்த சிரஞ்சீவி, நேற்று இரவு பாண்டியனை தேடிச்சென்று குத்திகொலை செய்திருப்பது தெரியவந்தது.

    • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • மாமல்லபுரம் பூஞ்சேரியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.

    செங்கல்பட்டு:

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் இருந்து 2500 விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மாமல்லபுரம் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் இன்று முதல் டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    மாமல்லபுரம் பூஞ்சேரியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் பகுதியில் இன்று முதல் (12-ந்தேதி) டிரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    • 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    தாம்பரம்:

    சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 14 -வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    ஏற்கனவே 4 கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், நிதிதுறை கூடுதல் செயலாளார் அருண் சுந்தர் தயாளன் ஐ.ஏ.எஸ். தொழிலாலர் நலத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.

    தொ.மு.ச. நிர்வாகிகள் சண்முகம் நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சூரியமூர்த்தி பழனி, சி.ஐ.டி.யு. சார்பில் ஆறுமுக நைனார் சவுந்தரராஜன் எம்.எல்.எப். சார்பில் வெங்கடேசன் ஏ.எல்.எல்.எப். சார்பில் அர்ஜூனன் உட்பட பல்வேறு சங்கங்கள் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்க அதிகாரிகள் வந்தனர்.
    • துர்கா நகர் மெயின்ரோட்டில் அதிகாரிகளை பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை, இந்திரா நகரில் உள்ள பெரியார் தெரு, தண்டு மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வீரராகவ பெருமாள் கோவில் ஏரியை சுற்றி சுமார் 314 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, அதனை அகற்ற தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்க அதிகாரிகள் வந்தனர்.

    அப்போது துர்கா நகர் மெயின்ரோட்டில் அதிகாரிகளை பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகள் திரும்பி சென்றனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    ×