என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார்.
    • கூடுவாஞ்சேரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40), இவர் வீடுகளுக்கு ஜல்லி, செங்கல் போன்றவற்றை வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மொபட்டில் தனது மகனை வீட்டின் அருகே உள்ள பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து வீச்சரிவாளால் சரமாரியாக முகம் உள்பட பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த செந்தில் குமார் சாலையோரம் உள்ள கால்வாயில் விழுந்து மொத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு செந்தில்குமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையாக வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன் விரோதம் காரணமாக அ.தி‌மு.க. நிர்வாகி செந்தில்குமாரை வெட்டினார்களா? அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடைபெற்றதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஜெ.ஜெ‌. நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி.
    • குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஜெ.ஜெ‌. நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 16), இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் செல்லும் போது திடீரென சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தான். அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களின் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன
    • தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், திருப்போரூர் எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களின் 614 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைசச்ர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர், ரூ.57.80 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல் நாத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • பா.ஜ.க. திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பில் புதுப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருக்கழுக்குன்றம்:

    செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டிணம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகத்தை கண்டித்தும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.க. திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பில் புதுப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. நிர்வாகிகள் தேவராஜ், கே.ஸ்ரீதர், துரைபாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பா.ஜ.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மதுராந்தகம் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.
    • உறவினர்கள் மதுராந்தகம்- கூவத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தம் அடுத்த கிரல்வாடியை சேர்ந்தவர் முருகன் (வயது 54 ). கூலித்தொழிலாளி. இவர் நேற்று ஜமீன் எண்டத்தூர் உள்ள பெட்டி கடைக்கு சென்று திரும்பும்போது கிரல்வாடி செல்லும் வழியில் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தாமூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தர்மலிங்கம் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்.

    இதனையடுத்து அவரது உறவினர்கள் மதுராந்தகம்- கூவத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சித்தாமூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் பகுதியில் 450 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது.
    • சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு அடிப்படையில் நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

    செங்கப்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் பகுதியில் 450 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், இதனை மீட்க கோரியும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

    அதன் பின்னர் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு அடிப்படையில் நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் வருவாய்த்துறை நிர்வாகம் நிலத்தை மீட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பஞ்சமி நிலத்தை மீட்க கோரி மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்திடம் மனு அளித்து சென்றனர்.

    • புஷ்பாவின் ஸ்கேன் அறிக்கையில் பிரசவத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.
    • எந்த டாக்டரிடம் வீடியோ காலில் பேசினர் என்பது குறித்து அவர்களது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி. எலக்ட்ரீசியன். இவரது மனைவி புஷ்பா (வயது 33). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் புஷ்பா 2-வதாக கர்ப்பம் அடைந்தார்.

    இவர் சூனாம்பேடு ஊராட்சி, இல்லீடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புஷ்பா பரிசோதனைக்கு சென்றபோது நேற்று (19-ந்தேதி) அவருக்கு பிரசவ தேதி என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். இதையடுத்து நேற்று காலை புஷ்பா பிரசவத்துக்காக இல்லீடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவருக்கு பிரசவ வலி வராததால் அங்கிருந்த டாக்டர்கள் வலி எடுத்தால் ஆஸ்பத்திரிக்கு வருமாறு கூறி திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து புஷ்பாவும் அவருடன் வந்த உறவினர்களும் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். மதியம் 2.30 மணி அளவில் புஷ்பாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக அவரை இல்லீடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் மீண்டும் அழைத்து சென்றனர். அப்போது ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து அங்கிருந்த நர்சுகள் 3 பேர் புஷ்பாவுக்கு பிரசவம் பார்க்க முயன்றனர். ஆனால் பிரசவத்தில் சிக்கல் இருந்ததால் அவர்களால் பிரசவம் பார்க்க முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுகுறித்து டாக்டர் ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரவித்தனர். ஆனால் அந்த டாக்டர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. அவர் நர்சுகளிடம், தான் செல்போனில் வீடியோ காலில் தொடர்ந்து பேசுவதாகவும், கூறும்படி செய்தால் சுகப்பிரசவம் பார்த்து விடலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

    இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் புஷ்பாவுக்கு நர்சுகள் 3 பேரும் டாக்டர் வீடியோ காலில் கூறியபடி பிரசவம் பார்க்க தொடங்கினர். சிறிது நேரத்தில் குழந்தை தலைகீழாக மாறி முதலில் கால்கள் மட்டும் வெளியே வந்தது. ஆனால் உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் நர்சுகள் திணறினர்.

    இதற்கிடையே புஷ்பாவின் உடல் நிலை தொடர்ந்து மோசம் அடைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் இதுபற்றி வீடியோ காலில் இருந்த டாக்டரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து பிரசவ வலியுடன் துடித்த புஷ்பாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவருக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது.

    இதனால் பதட்டம் அடைந்த நர்சுகள், பிரசவத்தில் புஷ்பாவுக்கு குழந்தை இறந்து பிறந்து விட்டது என்று உறவினர்களிடம் கூறினர். மேலும் புஷ்பாவை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு சென்றுவிட்டனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பாவின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர். டாக்டர்கள் இல்லாமல் நர்சுகள் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக குற்றம்சாட்டினர்.

    மேலும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து குழந்தையின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

    நர்சுகள் பிரசவம் பார்த்ததில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் புஷ்பாவின் உடல்நிலை மோசம் அடைந்து உள்ளது. அவருக்கு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புஷ்பாவின் ஸ்கேன் அறிக்கையில் பிரசவத்தில் பிரச்சினை ஏற்படலாம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதனை நர்சுகள் கவனிக்காமல் டாக்டர்கள் இல்லாததால் விபரீதமாக அவர்கள் சினிமா பாணியில் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்த்து உள்ளனர். இதனால் பச்சிளம் குழந்தையின் உயிர் பறிபோய் உள்ளது. இதுகுறித்து புஷ்பாவின் உறவினர்கள் சூனாம்பேடு போலீஸ நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பாவுக்கு பிரசவம் பார்த்த நர்சுகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர்கள் எந்த டாக்டரிடம் வீடியோ காலில் பேசினர் என்பது குறித்து அவர்களது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    அலட்சியமாக பிரசவம் பார்த்த நர்சுகள் மற்றும் வீடியோ காலில் பேசி பிரசவம் பார்க்க கூறிய டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புஷ்பாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திமுக ஆட்சியின் மீது இட்டுக்கட்டிய கதைகளையெல்லாம் பரப்ப நினைப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    • ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள் நாங்கள்.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடப்பதாகவும், 4 முதல்வர்கள் இருப்பதாகவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். மு.க..ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வராக  செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அவரது மனைவி, மகன், மருமகன்தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், மறைமலைநகரில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இருந்த அவலங்கள் உங்களுக்கு தெரியும். இப்போது எங்கள் ஆட்சியின் மீது இட்டுக்கட்டிய கதைகளையெல்லாம் பரப்ப நினைக்கிறார்கள். அவர்கள் இப்போது போடும் ஆர்ப்பாட்ட கோஷங்கள் மக்களுக்கு தெரியாதா? மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள் நாங்கள். அதிகாரத்துக்கு வந்துவிட்டால் விலகிச் செல்பவர்கள் அல்ல.

    திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புதிதாக கண்டுபிடித்து பேசிக்கொண்டிருக்கிறார். 4 முதலமைச்சர்கள் அலல, யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறார்களோ, எந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அனைவரும் சேர்ந்துதான் இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த கால அதிமுக ஆட்சியைப் போல் அல்ல இந்த ஆட்சி. இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிடமாடல் என்ற பெரும் தத்துவம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரு திறன் குறைந்தாலும் இன்னொரு திறன் மூலம் வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் என மு.க.ஸ்டாலின் பேச்சு
    • மாற்றுத் திறனாளிகள் என்ற சுயமரியாதை பெயரை சூட்டியர் தலைவர் கலைஞர் என பெருமிதம்

    செங்கல்பட்டு:

    தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது. மாநாடடில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தலைவர் கலைஞர் வைத்திருந்த பாச உணர்வோடுதான் நான் இங்கே வந்திருக்கிறன். தேர்தலில் மட்டும் மாற்றுத்திறனாளிகளை சந்திப்பவன் அல்ல நான், என்றைக்கும் உங்களோடு இருப்பவன். மாற்றுத் திறனாளிகள் என்ற சுயமரியாதை பெயரை சூட்டியர் தலைவர் கலைஞர்.

    ஒரு திறன் குறைந்தாலும் இன்னொரு திறன் மூலம் வெல்லும் ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள். அந்த வகையில் மற்றவர்களை விட அதிக திறன் கொண்டவர்கள் நீங்கள். அதனால்தான் மாற்றுத் திறனாளிகள என்று பெயர் சூட்டி, அதனையே அரசாணையாக மாற்றியவர் தலைவர் கலைஞர். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றி தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, தாம்பரம் ராஜா, மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி, பொதுச்செயலாளர் நம்பிராஜன், பொருளாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • செங்கல்பட்டு என்ற இடத்தில் முன் பணமாக ரு.1,000 செலுத்தி பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
    • மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நாளை மறுநாள் ஏலம் விடப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்துறை சார்பில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 12 நான்கு சக்கர வாகனங்களும், 3 மூன்று சக்கர வாகனங்களும், 50 இரு சக்கர வாகனங்களும் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்டு (அமலாக்கம்) ஆகியோர்களின் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, தானியங்கி பொறியாளர், காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் (கலால்), மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு, செங்கல்பட்டு மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் முன்னிலையில் செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.

    பொது ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம். மதுவிலக்கு அமல்பிரிவு. நெ, 20. ஏகாம்பரம் அவென்யூ. குண்டு்ர் கிராமம். செங்கல்பட்டு என்ற இடத்தில் முன் பணமாக ரு.1,000 செலுத்தி பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ரதி.
    • ரதி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ரதி (வயது 45), நேற்று முன்தினம் இவரது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலம் மண்ணிவாக்கம் அண்ணா தெரு வழியாக நடைபெற்ற போது அதே பகுதியை சேர்ந்த ஜீவா என்ற வாலிபர் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது ரதியின் உறவினர் சுஜித், ஜீவாவிடம் நேரமாகிவிட்டது. நடனத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார். இதனால் ஜீவாவுக்கும் சுஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து ஜீவா வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை பற்றி ரதி மற்றும் அவரது உறவினர்கள் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவா தனது உறவினர்களுடன் ரதி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியது. இதில் ரதியின் உறவினர் சுமதியை ஜீவா அறிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் காயம் அடைந்த சுமதி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரதி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை அரிவாளால் வெட்டிய 3 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கண்ணதாசன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி.
    • நாகலட்சுமி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கண்ணதாசன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 60), இவர் தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக மறைமலைநகர் கம்பர் தெரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நாகலட்சுமி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து நாகலட்சுமி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    ×