என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அடுத்த தா.பழூர் அருகேயுள்ள சிந்தாமணி காலனித் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சரண் (வயது 8). இவன் கடந்த வருடம் ஜுலை மாதம் 26-ம் தேதி வீட்டின் அருகே கும்பகோணம் -ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்போது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே சரண் பலியானான். இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பரஞ்சோதி மகன் வித்தியாசரண் (38) என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கானது ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட் மதிவாணன், இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அதில் விபத்துக்கு காரணமான டிரைவர் வித்தியாசரணுக்கு 2 வருடம் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிந்தாமணி காலனி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சரண் (வயது 8). இவர் கடந்த 2015–ம் ஆண்டு ஜூலை மாதம் 26–ந் தேதி கும்பகோணம்–ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்ததான்.
அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக சரண் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரண் இறந்தான். இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த வித்தியாசரண் (38) என்பவரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக வழக்கு ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கானது விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மதிவாணன் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் வித்தியாசரணுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற வேண்டி முள்ளுக் குறிச்சி திரவுபதை அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷே ஆராதனையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் செந்துறை ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞ ரணி செயலாளர் உதயம் ரமேஷ், ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ்மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 240 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், வேளாண் பொறியில் துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை எந்திரமயமாக்கல் மற்றும் உப இயக்கத் திட்டத்தின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 500 மதிப்பில் 2 பவர் டில்லர்களும், 1 விவசாயிக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் ஒரு நெல் நடவு எந்திரமும், 1 விவசாயிக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.6,350 மதிப்பில் பவர் ஸ்பிரேயரும் என 4 விவசாயிகளுக்கு ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 850 மதிப்பில் மானிய விலையில் வேளாண் கருவிகளையும் கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல துறையின் சார்பில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் 62-வது தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகள் தெலுங்கான மாநிலம் வாராங்கால் என்ற இடத்தில் 2.10.2016 முதல் 7.10.2016 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் அரியலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் மாருஷ், 19 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் 62 கிலோ எடை பிரிவில் தேசிய அளவில் முதல் இடத்தனை பெற்று தங்கபதக்கத்தினை வென்றார். மேலும் 17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் கோகுல கிருஷணன் 50 கிலோ எடை பிரிவிலும். அபிஷேக் 56 கிலோ எடை பிரிவிலும் பங்கேற்று நான்காவது இடத்தை பெற்றனர். தேசிய அளவிலான போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் அழைத்து வாழ்த்து கூறி பாராட்டினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரெங்கராஜன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை யோகேஸ்வரி, துணை கலெக்டர் (சமூகநல பாதுகாப்புத்திட்டம்) மங்கலம், வேளாண்மை பொறியில் துறை செற்பொறியாளர் பத்மராஜன், உதவி செயற்பொறியாளர் கான், உதவி செயற்பொறியாளர்கள் நெடுமாறன், சந்தியாகு, ரவிச்சந்திரன், குணசேகரன், பிரேம்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரகுநாதன், பளுதூக்கும் பயிற்றுனர் சதீஸ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசார் அபராதமாக வசூலித்தனர். தொடர்ந்து இனி வரும் காலங்களில் இதே போன்று வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் வெள்ளாழத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வைரம்(வயது 68). கடந்த சில வருடங்களுக்கு முன்பு வைரத்தின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். 2மகன்கள் வெளியூரில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி வைரம் தனிமையில் இருந்ததை தெரிந்துகொண்டு வைரத்தின் கழுத்தில் கிடந்த 3பவுன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பிஓடிவிட்டார்.
இது குறித்து உடையார் பாளையம் காவல் நிலையத்தில் வைரம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பிஓடிய மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் உடையார்பாளையம் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் நின்று கொண்டிருந்த உடையார்பாளையம பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை(40) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் கடந்த 5ம் தேதி வைரத்தின் கழுத்தில் கிடந்த 3பவுன்செயினை பறித்து சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த 3பவுன்நகையை மீட்டு போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா ( வயது 30). அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (29). மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் மேலக்குடியிருப்பு குமரன் நகரில் உள்ள ஆர்த்தியின் தந்தை ராமலிங்கம் வீட்டிற்கு அருகில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 10-ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடிய போது ஆர்த்தி தனது 25 பவுன் நகைகளை சரிபார்த்து தந்தை வீட்டில் உள்ள பீரோ லாக்கரில் வைத்தார்.
கடந்த 12-ந் தேதி மாலை ராமலிங்கம் லாக்கரை பூட்டிவிட்டு நெய்வேலியில் உள்ள தனது பெரிய மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு ஆர்த்தி தனது தந்தை வீட்டிற்கு வந்த போது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உள்ளே வைத்திருந்த நெக்லஸ், தோடு, மோதிரம் உட்பட 25 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது.
இது குறித்து ஆர்த்தி ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து , நகை திருடிய மர்மநபர்கள் யாரென்று விசாரித்து வருகிறார்.
செந்துறை:
செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சுகதேவ் (வயது 19) இவர் பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த துரைகன்னு மகன் அன்பழகனுக்கு சொந்தமான டிராக்டரில் டிரைவராக வேலை பார்த்துவந்தார்
இந்த நிலையில் சம்பவத்தன்று சுகதேவ் டிராக்டரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் செந்துறை அருகே எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வந்தபோது எதிர்பாரத விதமாக டிராக்டர் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பலத்த காயமடைந்த சுகதேவை அக்கம்பக்கத்தினர் மீட்டு செந்துறை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ், சுகதேவ்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே வானவநல்லூர் கிராமம் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகள் சுகன்யா (வயது23). 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். அதே தெருவைச் சேர்ந்தவர் குமரன் மகன் விஷ்ணுபாலன் (26) இருவரும் கடந்த ஒரு வருடகாலமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் விஷ்ணுபாலன் காதலி சுகன்யாவிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்காட்டி, அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சுகன்யா கற்பமடைந்துள்ளார். இதுகுறித்து தனது காதலனிடம் தான் 2 மாதம் கர்பமாக இருப்பதை கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதில் உடன்பாடில்லாத விஷ்ணுபாலன் சுகன்யாவைவிட்டு விலக முயற்சித்துள்ளார்.
இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த விஷ்ணுபாலன் உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது. இதற்கு மேல் நீ என்னை தொந்தரவு செய்தால் உன்னை கொலை செய்து புதைத்துவிடுவேன் என மிரட்டி அடித்துள்ளதாக தெரியவருகிறது.
இதுகுறித்து சுகன்யா தனது பெற்றோர்களிடம் கூறிவிட்டு பின்னர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்கு பதிந்து விஷ்ணுபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காவல்துறை சார்பில் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசணைக்கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் டி.எஸ்.பி. இனிகோ திவ்யன் கலந்துகொண்டு பேசியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் விபத்துகளில் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக 50 விபத்துகள் லாரிகளாளேயே நிகழ்ந்துள்ளது. எனவே லாரி உரிமையாளர்கள் தங்களது ஓட்டுனர்கள் குடிபோதையில் லாரிகள் இயக்க அனுமதிக்க கூடாது.
லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பாரம் ஏற்றக்கூடாது. விபத்து ஏற்படும் பகுதிகளில் லாரிகளை நிறுத்தக்கூடாது. ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் காலை ஏழு மணிமுதல் 9 மணிவரையும், மாலை 3 மணியில் முதல் 5 மணிவரையும் கனரக வாகனங்களை இயக்க கூடாது.
லாரிகளில் மணல், சிமெண்ட் போன்ற பொருட்களை ஏற்றிச்செல்லும்போது கட்டாயம் தார்பாய் கொண்டு மூடவேண்டும். மேலும் அனைத்து லாரிகளிலும் 10 நாட்களுக்குள் வேக கட்டுபாட்டு கருவி பொருத்த வேண்டும்.
அப்படி பொருத்தாத லாரிகளை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என பேசினார். ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் திருமாவளவன், துணைத்தலைவர் செல்வம், செயலாளர் ராஜா, பொருளாளர் பாலு உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பெங்களூருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 44). இவரது மனைவி புவனேஸ்வரி (42). இவர்களது மகன் அரவிந்த் (10). இந்த நிலையில், பாலாஜி தனது மனைவி, மகனுடன் கும்பகோணத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக பெங்களூருவில் இருந்து வாடகை காரில் புறப்பட்டு வந்தார். காரை பெங்களூருவை சேர்ந்த பிரவின் ஓட்டினார்.
நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த கருங்கை பஸ்நிறுத்தம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, காரைக்காலில் இருந்து சிமெண்டு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில், காரில் இருந்த பாலாஜி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் அரவிந்த், டிரைவர் பிரவின் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து லாரி டிரைவர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மீன் சுருட்டி அருகே பாப்பாக் குடியில் மத்திய அரசு நிறுவனமான இந்தியன் பவர் கிரீட் கார்ப்பரேசன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நெய்வேலியில் இருந்து உற்பத்தியாகி வரும் மின்சாரத்தை பிரித்து 7 மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்கு 150க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிறு வனத்தின் வளாகத்தில் கட்டிடப் பணிகள் நடை பெற்று வருகிறது. தனியார் கட்டிட நிறுவனங்கள் சில காண்டிராக்ட் எடுத்து பணியை செய்து வருகிறது. நேற்றிரவு அங்குள்ள கட்டிட த்தில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மெய்யாத்தூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் பலர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் நேற்றிரவு பணியை தொடங்கினர். இரும்பு கம்பிகளால் சாரம் அமைத்து கட்டிடத்தில் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சாரத்தின் மேல் 25 தொழிலாளர்களும், சாரத்தின் கீழ் 10 தொழி லாளர்கள் நின்று பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் மேலே நின்ற 25பேரும் அப்படியே கீழே விழுந்தனர். இதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர். கீழே நின்ற சிலரும் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அனைவரும் காயத்துடன் உயிர் தப்பினர்.
இது குறித்த தகவல் அறிந்த தும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங் கொண்டம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய், முருகன், ரமேஷ், தேவராஜன், மகேந்திரன், ஜூலியட், ஜெயசீலன், அறிவழகன், சக்கரவர்த்தி, குமார், பாபு, ரகுபதி, வேல்முருகன், கலையரசன், ரவி, ஜெயக்குமார், செல்வ ராஜ் உள்பட 28 பேர். இவர்கள் அனைவரும் மெய் யாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.






