என் மலர்
செய்திகள்

உடையார்பாளையத்தில் மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் வெள்ளாழத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வைரம்(வயது 68). கடந்த சில வருடங்களுக்கு முன்பு வைரத்தின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். 2மகன்கள் வெளியூரில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி வைரம் தனிமையில் இருந்ததை தெரிந்துகொண்டு வைரத்தின் கழுத்தில் கிடந்த 3பவுன் செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பிஓடிவிட்டார்.
இது குறித்து உடையார் பாளையம் காவல் நிலையத்தில் வைரம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பிஓடிய மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் உடையார்பாளையம் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் நின்று கொண்டிருந்த உடையார்பாளையம பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை(40) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் கடந்த 5ம் தேதி வைரத்தின் கழுத்தில் கிடந்த 3பவுன்செயினை பறித்து சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த 3பவுன்நகையை மீட்டு போலீசார் கைது செய்தனர்.






