என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் மோதி சிறுவன் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
    X

    கார் மோதி சிறுவன் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

    கார் மோதி சிறுவன் பலி. டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அடுத்த தா.பழூர் அருகேயுள்ள சிந்தாமணி காலனித் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சரண் (வயது 8). இவன் கடந்த வருடம் ஜுலை மாதம் 26-ம் தேதி வீட்டின் அருகே கும்பகோணம் -ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான்.

    அப்போது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே சரண் பலியானான். இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பரஞ்சோதி மகன் வித்தியாசரண் (38) என்பவரை கைது செய்தனர்.

    இந்த வழக்கானது ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட் மதிவாணன், இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அதில் விபத்துக்கு காரணமான டிரைவர் வித்தியாசரணுக்கு 2 வருடம் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×