என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது
அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடந்தது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 240 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற மாவட்ட கலெக்டர், இம்மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், வேளாண் பொறியில் துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை எந்திரமயமாக்கல் மற்றும் உப இயக்கத் திட்டத்தின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 500 மதிப்பில் 2 பவர் டில்லர்களும், 1 விவசாயிக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் ஒரு நெல் நடவு எந்திரமும், 1 விவசாயிக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.6,350 மதிப்பில் பவர் ஸ்பிரேயரும் என 4 விவசாயிகளுக்கு ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 850 மதிப்பில் மானிய விலையில் வேளாண் கருவிகளையும் கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல துறையின் சார்பில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் 62-வது தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகள் தெலுங்கான மாநிலம் வாராங்கால் என்ற இடத்தில் 2.10.2016 முதல் 7.10.2016 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் அரியலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் மாருஷ், 19 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் 62 கிலோ எடை பிரிவில் தேசிய அளவில் முதல் இடத்தனை பெற்று தங்கபதக்கத்தினை வென்றார். மேலும் 17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் கோகுல கிருஷணன் 50 கிலோ எடை பிரிவிலும். அபிஷேக் 56 கிலோ எடை பிரிவிலும் பங்கேற்று நான்காவது இடத்தை பெற்றனர். தேசிய அளவிலான போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை கலெக்டர் சரவணவேல்ராஜ் நேரில் அழைத்து வாழ்த்து கூறி பாராட்டினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரெங்கராஜன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை யோகேஸ்வரி, துணை கலெக்டர் (சமூகநல பாதுகாப்புத்திட்டம்) மங்கலம், வேளாண்மை பொறியில் துறை செற்பொறியாளர் பத்மராஜன், உதவி செயற்பொறியாளர் கான், உதவி செயற்பொறியாளர்கள் நெடுமாறன், சந்தியாகு, ரவிச்சந்திரன், குணசேகரன், பிரேம்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரகுநாதன், பளுதூக்கும் பயிற்றுனர் சதீஸ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






