என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு நிறுவன கட்டிடப்பணியில் சாரம் சரிந்து விழுந்ததில் 28 தொழிலாளர்கள் காயம்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மீன் சுருட்டி அருகே பாப்பாக் குடியில் மத்திய அரசு நிறுவனமான இந்தியன் பவர் கிரீட் கார்ப்பரேசன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நெய்வேலியில் இருந்து உற்பத்தியாகி வரும் மின்சாரத்தை பிரித்து 7 மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்கு 150க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிறு வனத்தின் வளாகத்தில் கட்டிடப் பணிகள் நடை பெற்று வருகிறது. தனியார் கட்டிட நிறுவனங்கள் சில காண்டிராக்ட் எடுத்து பணியை செய்து வருகிறது. நேற்றிரவு அங்குள்ள கட்டிட த்தில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மெய்யாத்தூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் பலர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் நேற்றிரவு பணியை தொடங்கினர். இரும்பு கம்பிகளால் சாரம் அமைத்து கட்டிடத்தில் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சாரத்தின் மேல் 25 தொழிலாளர்களும், சாரத்தின் கீழ் 10 தொழி லாளர்கள் நின்று பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் மேலே நின்ற 25பேரும் அப்படியே கீழே விழுந்தனர். இதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர். கீழே நின்ற சிலரும் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அனைவரும் காயத்துடன் உயிர் தப்பினர்.
இது குறித்த தகவல் அறிந்த தும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங் கொண்டம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய், முருகன், ரமேஷ், தேவராஜன், மகேந்திரன், ஜூலியட், ஜெயசீலன், அறிவழகன், சக்கரவர்த்தி, குமார், பாபு, ரகுபதி, வேல்முருகன், கலையரசன், ரவி, ஜெயக்குமார், செல்வ ராஜ் உள்பட 28 பேர். இவர்கள் அனைவரும் மெய் யாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.






