என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஜெயங்கொண்டம் அருகே டாக்டர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்16 Oct 2016 4:20 PM IST (Updated: 16 Oct 2016 4:20 PM IST)
ஜெயங்கொண்டம் அருகே டாக்டர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா ( வயது 30). அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி (29). மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் மேலக்குடியிருப்பு குமரன் நகரில் உள்ள ஆர்த்தியின் தந்தை ராமலிங்கம் வீட்டிற்கு அருகில் குடியிருந்து வருகின்றனர். கடந்த 10-ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடிய போது ஆர்த்தி தனது 25 பவுன் நகைகளை சரிபார்த்து தந்தை வீட்டில் உள்ள பீரோ லாக்கரில் வைத்தார்.
கடந்த 12-ந் தேதி மாலை ராமலிங்கம் லாக்கரை பூட்டிவிட்டு நெய்வேலியில் உள்ள தனது பெரிய மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு ஆர்த்தி தனது தந்தை வீட்டிற்கு வந்த போது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் உள்ளே வைத்திருந்த நெக்லஸ், தோடு, மோதிரம் உட்பட 25 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது.
இது குறித்து ஆர்த்தி ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து , நகை திருடிய மர்மநபர்கள் யாரென்று விசாரித்து வருகிறார்.

Next Story
×