என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்த பெண் போலீஸை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவரது மனைவி லதா. செல்வகுமார் சிங்கப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் அவர் சரிவர பணம் அனுப்பாததால், லதா இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்று, போலீஸ்காரராக பணியாற்றி வரும் ராதிகா(33) என்பவரிடம் புகார் செய்தார். அவர் செல்வகுமாரின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி பேசவே, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் உண்டானது. ஏற்கனவே திருமணமாகியும் ராதிகா செல்வகுமாருடன் பேசி வந்துள்ளார்.

    மேலும் கடந்த 28-ந்தேதி, செல்வகுமாரை ராதிகா திருமணம் செய்து கொண்டார். இது குறித்து லதா, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். மேலும் பெண் போலீஸ் ராதிகா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய அரியலூர் மாவட்ட எஸ்.பி. அனில்குமார்கிரி உத்தரவிட்டார்.

    போலீஸ் தேடுவதை அறிந்ததும் ராதிகா தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் இன்று ராதிகாவை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. அதிரடியாக உத்தரவிட்டார்.
    அரியலூர் அருகே புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்து பெண் போலீஸ் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவரது மனைவி லதா. இவர்களுக்கு ரோகிணி, நிலானி என்ற 2 மகள்களும், வாஞ்சிநாதன் என்ற மகனும் உள்ளனர்.

    செல்வகுமார் சிங்கப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 வருடமாக வேலை பார்த்து வரும் அவர், அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். மேலும் மாதந்தோறும் தனது மனைவியின் செலவுக்கு பணம் அனுப்பி வந்தார். லதாவும், அவரது குழந்தைகளும் சிங்கப்பூரில் உள்ள செல்வகுமாருடன் போனில் பேசி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வகுமாரும், லதாவும் போனில் பேசும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியுடன் பேசுவதை நிறுத்திய அவர், மாதந்தோறும் செலவுக்கு பணமும் அனுப்பவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் சிரமப்பட்ட லதா, தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பேசியும், செல்வகுமார் பணம் அனுப்பவில்லை.

    இதைத்தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு போலீஸ்காரராக பணியாற்றி வரும் ராதிகா (33) என்பவரிடம், தனது கணவர் செலவுக்கு பணம் அனுப்பவில்லை. எனவே அவரிடம் நீங்கள் பேசி பணம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி, செல்வகுமாரின் செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். அதனை வாங்கிய ராதிகா, செல்வகுமாரை தொடர்பு கொண்டு பேசி, பணம் அனுப்ப கூறுகிறேன். நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறவே, அதனை நம்பி லதா அங்கிருந்து சென்றார். ஆனால் புகார் செய்து 4 மாதங்கள் ஆகியும் ராதிகா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனிடையே செல்வகுமாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ராதிகா, லதாவுக்கு பணம் அனுப்புமாறு கூறியதோடு, செல்வகுமாரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் தங்களது புகைப்படங்களை ‘வாட்ஸ்அப்’ மூலம் பகிர்ந்து கொண்டனர். மேலும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.

    இது தொடர்பான தகவலை செல்வகுமார் வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு தெரிவித்தார். இதையறிந்த அவரது நண்பர் ஒருவர், இதுபற்றி லதாவிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த லதா, பெண் போலீஸ் ராதிகாவை சந்தித்து தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் அவர், எங்களுக்குள் அப்படி ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்த செல்வகுமார், மனைவி லதா மற்றும் குடும்பத்தினரிடம் சரியாக பேசவில்லை. மேலும் காலையில் வீட்டில் இருந்து சென்றவர் இரவு தான் வீடு தி ரும்பியுள்ளார். இதனிடையே லதாவுக்கு தெரியாமல் கடந்த 28-ந் தேதி செல்வகுமாரும், ராதிகாவும் சுவாமிமலை கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதனை அறிந்த லதா, இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெண் போலீஸ் ராதிகாவை தேடி வருகின்றனர்.

    ராதிகாவுக்கு ஏற்கனவே ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி கிராமத்தை சேர்ந்த மணிமுருகன் என்பவருடன் திருமணமாகியுள்ளது. அவர்களுக்கு ஹரிகரன் (5) என்ற மகன் உள்ளான். மணிமுருகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ராதிகா, கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரை அபகரித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம் அருகே பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியாகினர்.

    ஜெயங்கொண்டம்:

    சென்னை மடிப்பாக்கம் கார்த்திகாபுரத்தை சேர்ந்தவர்கள் முரளிகிருஷ்ணன், அரவிந்த் (வயது 30). நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிய இவர்கள் கும்பகோணத்தில் உள்ள குலதெய்வ கோவிலான உப்பிலியப்பன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர்.

    இதையடுத்து 2 பேரும் தங்களது குடும்பத்தினருடன் நேற்றிரவு ஒரு காரில் சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு புறப்பட்டனர். காரை அரவிந்த் ஓட்டினார்.

    இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாக்குடி சென்னை- கும்பகோணம் சாலையில் உள்ள வெள்ளமதகு பாலத்தில் வந்தபோது எதிர் பாராதவிதமாக கார் நிலை தடுமாறி பாலத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி அரவிந்த் மற்றும் அவரது மகன் சஷ்வத் (1½) மற்றும் முரளிகிருஷ்ணன் மனைவி சந்தோஷி (29) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    முரளிகிருஷ்ணன், அவரது மகன் அக்‌ஷத் (5), அரவிந்த் மனைவி சரண்யா ஆகியோர் பலத்த காயம டைந்து உயிருக்கு போராடினர். இது குறித்த தகவல் அறிந்ததும் மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி சங்கரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று ,காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 3 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் பலியான அரவிந்த் கப்பல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். சந்தோஷி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற போது விபத்தில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் விதைப்பு இயந்திரத்தை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா பண்ணை மகளிர் குழுவிற்கு நேரடி நெல் விதைப்பு இயந்திரத்தினை மாவட்ட கலெக்டர் அவர்களின் விருப்ப நிதியிலிருந்து சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் விதைப்பு இயந்திரத்தினை சிறப்பாக செயல்ப்பட்டு வரும் அம்மா பண்ணை மகளிர் குழுவிற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கி தெரிவித்தாவது

    அரியலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் 60,000 ஏக்கர் பரப்பில் நடைபெற்று வருகிறது. இதில் இயல்பாக 3000 முதல் 5000 ஏக்கர் வரை நேரடி நெல் விதைப்பு செய்யப்படும்.  தற்போது தமிழக முதலமைச்சர் சம்பா தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு முழு வீச்சில் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.600- வீதம் மானியம் வழங்கப்படுகிறது. 

    இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்ய அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் வட்டாரத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் அமிர்தராயன் கோட்டை அம்மா பண்ணை மகளிர் குழுவிற்கு, ரூ.58,000- மதிப்புள்ள நேரடி நெல் விதைப்பு இயந்திரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கப்பட்டது. 

    நேரடி நெல் விதைப்பு இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 5 ஏக்கர் வரை விதைப்பு செய்யலாம்.  ஏக்கர் ஒன்றுக்கு விதைப்பு செய்ய குறைந்தபட்ச வாடகையாக ரூ.900- பெறப்படும்.  இதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.300- வீதம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1500- வரை நிகர வருமானம் கிடைக்கும்.  இந்த வருமானத்தை அம்மா பண்ணை மகளிர் குழுவினர் தங்களது வாழ்வாதாரத்திற்கும்,  இயந்திரத்தை பராமரிப்பதற்கும் பயன்படுத்திடவும் மேலும் இந்த குழுவின் செயல்பாட்டினை பொறுத்து பிற அம்மா பண்ணை மகளிர் குழுக்களுக்கும் தேவையான வேளாண் கருவிகள் வழங்கப்பட நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்.

    நேரடி நெல் விதைப்பு இயந்திரம் மூலம் நெல் மற்றும் 10 வகையான விதைகளை விதைப்பு செய்வதோடு மட்டுமல்லாமல் உரங்களையும் இடலாம்.  எனவே மக்காச்சோளம், சோளம், கம்பு, கடலை, உளுந்து மற்றும் துவரை போன்ற பயிர்களில் ஆண்டு முழுவதும் விதைப்பு செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் போதுமான அளவில் வருடம் முழுவதும் வருமானம் பெற வாய்ப்புள்ளது.

    விவசாயிகள் இயந்திரங்களை பயன் படுத்தி பயன்யடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்மை) சதானந்தம், துணை இயக்குநர் கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நந்தகுமார் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
    அரியலூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட சமூக ஆர்வலர் கொலையில் தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 70). சமூக ஆர்வலரான இவர், ஊழலுக்கு எதிராக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது உயர் அதிகாரிகளிடம் பல்வேறு புகார்களை அளித்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி மாத்தூருக்கு சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஸ்வநாதனின் மருமகள் அமுதா கூவாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர்.

    இதனிடையே கூலிப்படையை சேர்ந்த அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நயினார்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளி பால முருகன்(46), சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்(31), நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த அழகர்(43) ஆகிய 3பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் விஸ்வநாதனை கடத்தி, கொன்று புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து கடலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட வெள்ளாறு பகுதியில் புதைக்கப்பட்ட விஸ்வநாதன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் 3பேரையும் கைது செய்து, விஸ்வநாதன் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அரியலூரில் தியேட்டர் ஒன்றை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் முருகன் குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    மேலும் இந்த சம்பவத்தில் கடலூர் மாவட்டம் நல்லூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மகேந்திரன், நயினார்குடிகாடை சேர்ந்த குணசேகரன் மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த அருள், லிங்கன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் குணசேகரனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நேற்று மகேந்திரனை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 28-ந்தேதி நடக்கிறது. இத்தகவலை கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் 28.10.2016 அன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது.

    உடையார்பாளையம் வட்டத்தில் மணகெதி, பாப்பாகுடி (வ), தத்தனூர் (கி) கிராமங்களில் நடைபெறுகிறது. நான்காம் கட்டமாக அரியலூர் வட்டத்தில் கோவில் எசனை (மே), கீழகொளத்தூர் கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் துளார் கிராமத்தில் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாது காப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    ஜெயங்கொண்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் காந்தி நகரைச் சேர்ந்த கந்தன் மகன் சந்திரமோகன். இவர் நேற்று முன்தினம் தனது தாய் காசியம்மாளை பைக்கின் பின்னால் உட்காரவைத்துக் கொண்டு கடை வீதிக்கு சென்றுள்ளார். அப்போது ரோட்டில் உள்ள பள்ளத்தில் பைக் ஏரி இறங்கியதில் காசியம்மாள் வண்டியிலிருந்து பின்பக்கம் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தஞ்சை மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் காசியம்மாள் இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அரியலூர் சமூக ஆர்வலர் கொலையில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர், தி.மு.க. பிரமுகர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 70). சமூக ஆர்வலரான இவர், ஊழலுக்கு எதிராக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது உயர் அதிகாரிகளிடம் பல்வேறு புகார்களை அளித்து வந்தார்.

    2008 ஆம் ஆண்டு அந்த பகுதியில் பணியாற்றிய கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் விஸ்வநாதன் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி மாத்தூருக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து விஸ்வநாதனின் மருமகள் அமுதா குவாகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே விஸ்வநாதன் குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். அதன் பேரில் சோழன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சில நாட்களுக்கு முன்பு கூலிப்படையை சேர்ந்த சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளி பாலமுருகன், சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர், நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த அழகர் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் விஸ்வநாதனை கடத்தி கொன்று, புதைத்தது தெரிய வந்தது.

    விஸ்வநாதன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று கைதான பாலமுருகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கடலூர் மாவட்டம் முருகன் குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ். மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரை விலைக்கு வாங்க முடிவு செய்தார். அந்த தியேட்டரை மற்றொருவரும் அதிக விலை கொடுத்து வாங்க முயற்சித்தார். இதற்கு விஸ்வநாதன் உறுதுணையாக இருந்தார்.

    இதனால் விஸ்வநாதனுக்கும், ரியல் எஸ்டேட் அதிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    விஸ்வநாதனை கொலை செய்ய திட்டமிட்ட ரியல் எஸ்டேட் அதிபர், இது பற்றி நல்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் கூறினார். அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதன் படி கூலிப்படையை சேர்ந்தவர்களான பாலமுருகன், பாஸ்கர், அழகர் ஆகியோரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் விஸ்வநாதனை கடத்தி சென்று, முருகன்குடியில் உள்ள செங்கல் சூளையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்தனர். விஸ்வநாதன் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ரூ.10 லட்சம் வரை பணம் கேட்டும் மிரட்டினர்.

    இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பாலமுருகனை, ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தும் போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, அவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து விஸ்வநாதனை கொன்று புதைத்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    இதில் வீரப்பனின் கூட்டாளியான பாலமுருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர், தி.மு.க. பிரமுகர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    விஸ்வநாதன் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது புகார் கூறியதால் அவர்களுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன விதிமுறைகளை மீறிய 186 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாதிருத்தல், அதிவேகமாக செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்பட வாகன விதிமுறைகளை மீறியதாக 186 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசார் அபராதமாக வசூலித்தனர். தொடர்ந்து இனி வரும் காலங்களில் இதே போன்று வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.10.2016 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்டஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.10.2016 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்டஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் விவசாயிகள்,முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கபிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்தகுறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுக்கா பகுதிகளில் 100 நாள் வேலைதிட்டத்தில் பணிசெய்த பணியாளர்களுக்கு கூலி பாக்கியை தராத மத்திய, மாநில அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் முற்றுகையில் ஈடுபட முயன்ற 45 பெண்கள் உட்பட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுக்கா பகுதிகளில் 100 நாள் வேலைதிட்டத்தில் பணிசெய்த பணியாளர்களுக்கு கூலி பாக்கியை தராத மத்திய, மாநில அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் முற்றுகையில் ஈடுபட முயன்ற 45 பெண்கள் உட்பட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் மணிவேல், ஒன்றியசெயலாளர் மகாராசன், விவசாய சங்க நிர்வாகி உத்திராபதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் 100 நாள் வேலைதிட்டத்தில் பணிசெய்தவர்களுக்கு கூலி பாக்கியை தராத மத்திய, மாநில அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஜெயங்கொண்டம் காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக சென்று தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 45 பெண்கள் உட்பட 95 பேரை ஜெயங்கொண்டம் நான்குரோட்டில் போலீசார் தடுத்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அனைவரையும் கைதுசெய்தனர்.

    போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பிச்சை பிள்ளை, பரமசிவம், விவசாய சங்க மாவட்ட தலைவர் நாகரத்தினம், ஒன்றியசெயலாளர் இளவரசன், அனுசூயா, பெரியசாமி, விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றியசெயலாளர் முத்துகிருஷ்ணன், தா.பழுர் ஒன்றிய செயலாளர் தங்கராசு, மாவட்ட பொறுப்பாளர்கள் செககுமார், இளங்கோமணி, வடிவேல், அருமைராசு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஜெயங்கொண்டம் அருகே புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டத்தை அடுத்த கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சரத்குமார் (வயது 22). இவர் பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மகள் சவுந்தர்யா (19) என்ற பெண்ணை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சவுந்தர்யா கிளிமங்கலத்தில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள வயலில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து சவுந்தர்யாவின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் தா.பழூர் சாலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு இனிகோதிவ்யன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    திருமணமாகி 4 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×