என் மலர்
அரியலூர்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
தமிழக அரசு கடும் வட்டி விதிப்பினை தடை செய்யும் நோக்கில், தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003 கொண்டு வந்தது. இச்சட்டத்தின் கீழ் தின வட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி உள்ளிடவைகள் கந்து வட்டி என கணக்கிடப்படும். எனவே, பொதுமக்கள் கடன் பெறுவதற்கு முன்பு கீழ்காணும் விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின்கீழ் அங்கீகாரம் பெறாத நிதி நிறுவனங்களின் வாக்குறுதிகளான உடனடி கடன் மிக குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மேலும், உரிமம் பெறாத நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற வேண்டாம். கடன் பெறும் போது ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கிகள், வங்கி பரிவர்த்தனை அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்றுள்ள நிதி நிறுவனத்திடம் கடன் பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்யப்படாத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தினர் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயம் செய்யப்பட மாட்டாது. பொதுமக்கள் கடன் பெறும் முன்னர் அதற்கான நிபந்தனைகள் ஒப்பந்தங்கள், வட்டி விகிதம் ஆகியவற்றை பரிசீலனை செய்து ஆண்டுக்கு எவ்வளவு வட்டி என்பதனை கண்டறிந்து அதன் பின்பு கடன் பெறுவது குறித்த முடிவு எடுக்க வேண்டும்.
கந்து வட்டிக்கு கடன் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். மீறுபவர்கள் மீது தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003 கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசார் அபராதமாக வசூலித்தனர். தொடர்ந்து இனி வரும் காலங்களில் இதே போன்று வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
அரியலூர் அருகே உள்ள குருவாளி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 34) மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் இவருக்கும் இவரது மனைவி ரஞ்சிதாவிற்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் குடும்பம் நடத்த வருமாறு ரஞ்சிதாவை அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே மனமுடைந்த ரவிச்சந்திரன் விஷம் குடித்து தாலுக்கா அலுவலகம் முன்பு மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு பொதுமக்கள் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயரிழந்தார். இது குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் 11.11.2016 அன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது.
உடையார்பாளையம் வட்டத்தில் உல்லியக்குடி, பாப்பாகுடி (தெ), தா.பழூர் கிராமங்களில் நடைபெறுகிறது. நான்காம் கட்டமாக, அரியலூர் வட்டத்தில் வாரணவாசி, கோவில் எசணை (கி) கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி சேர்வ ராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அசோக்குமார் (வயது 18). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர்களான ஜெயங்கொண்டம் அருகேயுள்ள நெல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் மகன் ராஜா (23), வேல்முருகன் மகன் கார்த்தி (22) ஆகியோருடன் நேற்று இரவு சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை நெல்லித்தோப்பு டாஸ்மாக் கடை அருகே சென்றுகொண்டிருந்தபோது அதே வழியில் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அசோக்குமார், ராஜா, கார்த்திக் ஆகியோர் பலத்த அடிப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அசோக்குமார் மீன்சுருட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வளையாபதி வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கொல்லாபுரம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். இவரது மனைவி அமுதா (35). மாடுகளுக்கு கொம்பு சீவும் தொழில் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு ராதிகா என்ற மகளும், ராஜதுரை என்ற மகனும் உள்ளனர். ராதிகாவிற்கு திருமணமாகி தனது கணவருடன் மணப்பாறை மஞ்சம்பட்டியில் வசித்து வருகிறார். மகன் ராஜதுரை தந்தையுடன் தொழில் செய்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் அமுதா வாந்தி எடுத்துள்ளார். இதுபற்றி எம்.ஜி.ஆர். கேட்டபோது குருணை மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
இதையறிந்த எம்.ஜி.ஆர். மற்றும் பொதுமக்கள் அமுதாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அமுதாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர். மீன்சுருட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்
இதே போல் விக்கிரமங்கலம் அருகேயுள்ள செட்டி திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (40). இவரது மனைவி உத்திராபதி (35). உத்திராபதிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது.
இதனால் விரக்தியடைந்த இவர் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை தின்று விட்டார்.
உயிருக்கு போராடிய அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உத்திராபதி இறந்தார்.
இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துசாமி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் தனியார் சிமெண்ட் ஆலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த ஆலையில் கடந்த 25 ஆம் தேதி ஆலை வளாகத்தில் பணியின் போது சிமெண்ட் மூட்டை ஏற்றிய லாரி மோதியதில் செக்யூரிட்டி கரிகாலன் என்பவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு 10 நாட்களாக சிகிச்சை பெற்ற தற்போது சிகிச்சை பலனின்றி கரிகாலன் உயிரிழந்தார். அவருக்கு எந்த ஒரு மருத்து உதவியே , இழப்பீட்டுத் தொகையையே ஆலை நிர்வாகம் மற்றும் ஒப்பந்தகாரர்கள் தராததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆலையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மேலும் அவர்கள் கூறும் போது ஆலை நிர்வாகம் கருணை அடிப்படையில் கரிகாலனின் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கூறினர்.
டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்த சென்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர தலைவர் பழனிசாமி, மாவட்ட துணைத்தலைவர் கொளஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கையில் கொடியை பிடித்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள்சந்திரசேகர், சீமான், மாவட்ட தொழிற்சங்கம் சிவக்குமார், பிச்சைப்பிள்ளை,ரவிசந்திரபோஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 42). இவருடைய மனைவி பூங்கொடி. இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு கோபிகா (12) என்ற மகள் இருக்கிறாள்.
இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக விவாகரத்து கேட்டும், ஜீவனாம்சம் கோரியும் அரியலூர் கோர்ட்டில் பூங்கொடி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 30–5–2016 அன்று ஏற்பட்ட தகராறில் இளங்கோவன் தனது மனைவி பூங்கொடி மற்றும் மகள் கோபிகா ஆகியோரை கழுத்தில் கத்தியால் வெட்டி விட்டு ஓடி விட்டார்.
இதுகுறித்து வெங்கனூர் போலீசில் பூங்கொடி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்து அரியலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி லிங்கேஷ்வரன் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், இளங்கோவன் மனைவியை கத்தியால் வெட்டியதற்கு 2 ஆண்டும், மகளை கத்தியால் வெட்டியதற்கு 2 ஆண்டும் சிறை தண்டனை விதித்தும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், மனைவி–மகளுக்கு ரூ.1½ லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார்.
சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியிருப்பதால் 2 ஆண்டு சிறை தண்டனையையே இளங்கோவன் அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் இளங்கோவனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அரியலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
அந்தமான் அருகே கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதாலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சம்பா சாகுபடிக்காக மழையை நம்பியிருந்த விவசாயிகள் இதனால் சற்றே திருப்தியடைந்துள்ளனர். இந்த மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலான மழை காணப்பட்டது. இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் 13 மி.மீ, சித்தமல்லி 8 மி.மீ, குருவாரி 13 மி.மீ, பெரம்பலூர் மாவட்டத்தில் 10 மி.மீ, செட்டிக்குளம் 2 மி.மீ, பாடாலூர் 4 மி.மீ, புதுக் கோட்டை மாவட்டத்தில் 6.1 மி.மீ, ஆலங்குடி 8 மி.மீ, நாகுடி 4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
திருச்சி, கரூர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது. இந்த பருவ மழை தொடர்ந்து பெய்தால் விவசாயம் நல்ல முறையில் செய்ய முடியும் என விவசாயிகள் கூறினர்.
திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.நாகையில் இன்று அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை பலத்த மழை பெய்தது.
வேதாரண்யம், சீர்காழியிலும் இரவு பலத்த மழை கொட்டியது. மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வலங்கைமான் -28.2
குடவாசல் - 46.8
மயிலாடுதுறை - 46.5
மஞ்சளாறு - 26.6
மணல்மேடு - 8.4
சீர்காழி - 37.7
கோரையாறு - 16.2
திருவாரூர் - 23.2
நாகை - 136.1
தலைஞாயிறு - 58.1
திருப்பூண்டி - 62.4
வேதாரண்யம் - 48.1
பூதலூர் 13.8
வெட்டிக்காடு - 11.3
ஆயக்குடி - 14.4
ஒரத்தநாடு - 8.4
மதுக்கூர் - 8.6
பட்டுக்கோட்டை - 8.5
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கெண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது45). கூலி தொழிலாளி. இவரது மனைவி பவளக்கொடி (42). இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண் உள்ளனர்.
மகள் சரண்யாவிற்கு கடந்த 1 வருடத்திற்கு முன் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். சக்கரவர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பவளக்கொடியும், அவரது மகனும் கூலிவேலைக்கு சென்றிருந்த போது சக்கரவர்த்தி வயிற்று வலி தாங்கமுடியாமல் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அப்போது விதிமுறைகளை மீறி சரக்கு ஆட்டோவில் பொது மக்களை ஏற்றி சென்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மிராளூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் தினேஷ் (வயது 21), கூட்டாம்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ் (25), கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25), மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாகுடி பகுதியை சேர்ந்த குணசேகரன் (25), தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) ஆகிய 5 டிரைவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.






