என் மலர்
செய்திகள்

அரியலூர் தனியார் சிமெண்ட் ஆலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் தனியார் சிமெண்ட் ஆலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த ஆலையில் கடந்த 25 ஆம் தேதி ஆலை வளாகத்தில் பணியின் போது சிமெண்ட் மூட்டை ஏற்றிய லாரி மோதியதில் செக்யூரிட்டி கரிகாலன் என்பவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு 10 நாட்களாக சிகிச்சை பெற்ற தற்போது சிகிச்சை பலனின்றி கரிகாலன் உயிரிழந்தார். அவருக்கு எந்த ஒரு மருத்து உதவியே , இழப்பீட்டுத் தொகையையே ஆலை நிர்வாகம் மற்றும் ஒப்பந்தகாரர்கள் தராததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆலையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மேலும் அவர்கள் கூறும் போது ஆலை நிர்வாகம் கருணை அடிப்படையில் கரிகாலனின் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கூறினர்.






