என் மலர்

  செய்திகள்

  விதிமுறைகளை மீறி சரக்கு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி வந்த டிரைவர்கள் 5 பேர் கைது
  X

  விதிமுறைகளை மீறி சரக்கு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி வந்த டிரைவர்கள் 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விதிமுறைகளை மீறி சரக்கு ஆட்டோவில் பொதுமக்களை ஏற்றி வந்த டிரைவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து சரக்கு அட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
  அரியலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி, விதிமுறைகளை மீறி ஆட்களை ஏற்றி செல்லும் சரக்கு ஆட்டோ, டிராக்டர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்ந நிலையில், மீன்சுருட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சீமான் தலைமையில் போலீசார் மீன்சுருட்டி பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டனர்.

  அப்போது விதிமுறைகளை மீறி சரக்கு ஆட்டோவில் பொது மக்களை ஏற்றி சென்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மிராளூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் தினேஷ் (வயது 21), கூட்டாம்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ் (25), கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25), மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாகுடி பகுதியை சேர்ந்த குணசேகரன் (25), தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) ஆகிய 5 டிரைவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

  மேலும் சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×