என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட 95 பேர் கைது
    X

    ஜெயங்கொண்டத்தில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட 95 பேர் கைது

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுக்கா பகுதிகளில் 100 நாள் வேலைதிட்டத்தில் பணிசெய்த பணியாளர்களுக்கு கூலி பாக்கியை தராத மத்திய, மாநில அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் முற்றுகையில் ஈடுபட முயன்ற 45 பெண்கள் உட்பட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் மணிவேல், ஒன்றியசெயலாளர் மகாராசன், விவசாய சங்க நிர்வாகி உத்திராபதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் 100 நாள் வேலைதிட்டத்தில் பணிசெய்தவர்களுக்கு கூலி பாக்கியை தராத மத்திய, மாநில அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஜெயங்கொண்டம் காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக சென்று தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 45 பெண்கள் உட்பட 95 பேரை ஜெயங்கொண்டம் நான்குரோட்டில் போலீசார் தடுத்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அனைவரையும் கைதுசெய்தனர்.

    போராட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பிச்சை பிள்ளை, பரமசிவம், விவசாய சங்க மாவட்ட தலைவர் நாகரத்தினம், ஒன்றியசெயலாளர் இளவரசன், அனுசூயா, பெரியசாமி, விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றியசெயலாளர் முத்துகிருஷ்ணன், தா.பழுர் ஒன்றிய செயலாளர் தங்கராசு, மாவட்ட பொறுப்பாளர்கள் செககுமார், இளங்கோமணி, வடிவேல், அருமைராசு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×