என் மலர்
செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் வாகன விதிமுறைகளை மீறிய 166 பேர் மீது வழக்குப்பதிவு
அரியலூர் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன விதிமுறைகளை மீறிய 166 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாதிருத்தல், அதிவேகமாக செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்பட வாகன விதிமுறைகளை மீறியதாக 166 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசார் அபராதமாக வசூலித்தனர். தொடர்ந்து இனி வரும் காலங்களில் இதே போன்று வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story