என் மலர்
அரியலூர்
இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் இருந்து இலந்தைகூடம் கிராமத்திற்கு செல்லும் சாலை இடையே கடந்த சில வருடங்களாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த டாஸ்மாக் கடை இலந்தைகூடம் கிராமத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு பாதி சாலையை மட்டும் மறித்து அமர்ந்து கொண்டு, டாஸ்மாக் கடை எங்கள் கிராமத்திற்கு வேண்டாம், அதனை உடனடியாக மூட வேண்டும், என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்க கோவில் எசனை, விளாகம் என இரண்டு கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர். அவர்கள் வரும் சாலையில் இந்த டாஸ்மாக் கடை இயங்கி வருவதால், அவர்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. மேலும் இந்த கடை தொடர்ந்து இயங்கி வந்தால் எங்கள் கிராமத்தின் பல ஆண்கள் மதுவுக்கு அடிமையாக நேரிடும். எனவே அந்த கடையை உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கனூர் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களின் கோரிக்கை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள், என்று தெரிவித்தனர். இதையடுத்து பெண்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
விக்கிரமங்கலம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் கடம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கடம்பூர் மேலத்தெருவை சேர்ந்த தங்கராசுவின்(வயது 59) வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தங்கராசுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அணிக்குறிச்சி மேல தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 24). விவசாயியான இவர் பல மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனிமையில் இருந்த விஜய், வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதைக்கண்ட உறவினர்கள் விஜயை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜய், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில், விஜயின் தாய் செல்வி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் கண்ணாரப்பாளையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் கண்ணாரப்பாளையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
பின்னர், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 63830 71800, 93845 01999 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டனர்.
தா.பழூர் அருகே உள்ள கிராமத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அடிக்காமலை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அய்யனார், மதுரைவீரன் கோவில் உள்ளது. கடந்த 20-ந் தேதி கோவில் அர்ச்சகர் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி செல்லதுரை, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போலீசார் மதனத்தூர் போலீஸ் சோதனைச் சாவடி அருகே சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் தெற்குத் தெருவை சேர்ந்த வீராசாமி (32) என்பதும், அவர் தான் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.2 ஆயிரத்தை திருடியதும் தெரிய வந்தது. அதன்பேரில், அவரை போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உடையார்பாளையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் வெள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குறலரசன்(வயது 24), அதே பகுதியை சேர்ந்த சந்துரு (55) ஆகியோர் அவர்களது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீன்சுருட்டி அருகே தரைப்பாலம் உடைந்து துண்டிக்கப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமத்திற்கு செல்ல தார் சாலை உள்ளது. இந்த சாலையானது அளவேரி வழியாக சத்திரம், வெத்தியார்வெட்டு மற்றும் சலுப்பை ஆகிய கிராமங்களுக்கு செல்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த சாலை வழியாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று படித்து வந்தனர். இந்த சாலையின் இடையே ஏரியில் இருந்து தண்ணீர் செல்வதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு, தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக இந்த சாலையையொட்டி உள்ள பெரிய ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியபோது, தரைப்பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தி வந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்போது 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி ஆலத்திப்பள்ளம் கிராமம் வழியாக சென்று வருவதால், சரியான நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.
அவசர காலங்களில் கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சத்திரம், வெத்தியார்வெட்டு மற்றும் சலுப்பை கிராமத்தில் இருந்து இந்த சாலை வழியாக வரும் முதியவர்கள், தரைப்பாலம் உடைந்து சாலை துண்டிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. மேலும் இந்த வழியாக இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையில் தரைப்பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்லூரிக்கு செல்லுமாறு கூறி தந்தை திட்டியதால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மழவராயநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்வேல்(வயது 42). விவசாயி. இவரது மகன் செல்வகுமார்(19). இவர் பெரம்பலூரை அடுத்துள்ள குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் செல்வகுமார் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்வேல், கல்லூரிக்கு செல்லுமாறு கூறி செல்வகுமரை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த செல்வகுமார் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் செல்வகுமாரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வகுமார், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் செந்தில்வேல் கொடுத்த புகாரின்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோவிந்தபுத்தூர் மேலத் தெருவில் உள்ள பூங்கொடி(வயது 28) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பூங்கொடியை கைது செய்தனர்.
செந்துறை அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள படைவெட்டிக்குடிக்காடு கிராமத்தில் வயல் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக பரமசிவம், விற்பனையாளராக வேல்முருகன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு மது விற்பனை முடிந்த பின்னர், அன்றைய வசூலான ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்தை ஒரு பையில் வைத்து எடுத்துக்கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
வழியில் வயல் பகுதியில் மறைந்திருந்த 3 பேர், திடீரென வந்து உருட்டுக்கட்டையால் பரமசிவம், வேல்முருகனை தாக்கினர். இதில் நிலை குலைந்த 2 பேரும் கீழே விழுந்தனர். இதையடுத்து 3 பேரும், பரமசிவம் வைத்து இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் குவாகம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரமங்கலம் அருகே கோவிலில் காணாமல் போன அனுமன் சிலையை கிணற்றில் இருந்து போலீசார் மீட்டனர். அந்த சிலையை கிணற்றில் போட்டது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் இருந்த கல்லால் ஆன சுமார் ஒரு அடி உயரமுள்ள அனுமன் சிலையை காணவில்லை.
இது குறித்து இக்கோவில் நிர்வாகத்தின் செயல் அலுவலர் சரவணன், விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார், அந்த சிலையை தேடும் பணியை மேற்கொண்டனர்.
நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில், அந்த சிலையை தேடும் முயற்சியை மேற்கொண்டனர். கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு உள்ளே இறங்கி தேடி பார்த்தபோது, அனுமன் சிலை சேற்றில் சிக்கிக்கிடந்தது, தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலையை, கிணற்றுக்குள் இருந்து சிலையை மீட்டு தூய்மைப்படுத்தி அபிஷேகம் செய்து, அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைத்தனர். மேலும் அந்த சிலையை கிணற்றுக்குள் போட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு காணாமல் போன அனுமன் சிலையை கண்டுபிடித்த, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

வி.கைகாட்டி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்த தங்கராசுவின் மகன் கார்த்திக்(வயது 31). இவர் இப்பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வேலை முடிந்த பின்னர், அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
ரெட்டிபாளையம்- நாயக்கர்பாளையம் வளைவில் திரும்பியபோது சாலை ஓரத்தில் உள்ள பனைமரத்தில் கார்த்திக் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள்மோதியது.
இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திக்கிற்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.