என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடை வீதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  கடைவீதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் ஆலோசனையின் பேரில் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.  

    சோதனையில் ஜெயங் கொண்டம்  விருத்தாச்சலம் ரோடு ராஜகோபால்(62), ஜெயங்கொண்டம் மேட்டுத் தெரு அமுதா (41),மறவன் குடியிருப்பு துரை (53), ஜெயங்கொண்டம் சிவக் குமார் (51), ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலை சுரேஷ் (32) ஆகியோர் தங்கள் கடைகளில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து சுரேஷ், சிவகுமார், துரை, அமுதா, ராஜகோபால் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ஆண்டிமடத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவாஜி அருளப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர், பள்ளி இடைநின்ற மாணவ-மாணவிகள், நிதி உதவி தேவைப்படும் குழந்தைகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த குழந்தைகள் தொடர்பான கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன. 

    மேலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்குதல், பள்ளிகளில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் யோகா வகுப்பை குழந்தைகளின் நல்வாழ்வுக்காக ஏற்படுத்தவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

    நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர், காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 1098, ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், சமூகநலத்துறை போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை 19-ந்தேதி  சனிக்கிழமை  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான 

    அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், 

    குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளுக்கும், 

    தேளுர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைக்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர்,  விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர்கட்டளை, உடையவர் தீயனூர், 

    விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளுக்கும், 

    நடுவலூர் துணைமின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி முழுவதும் மற்றும்  

    செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான இராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளுக்கு  காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 

    இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    ஜெயங்கொண்டத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் மெயின் ரோடு தெருவைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம்  (வயது37).  இவர் மோட்டார்சைக்கிளில் ஆண்டிமடத்தில்  இருந்து கல்லாத்தூர் நோக்கி  நேற்று இரவு சென்று கொண்டிருந்தார்.  

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜபிரகாஷ் 20 ஆண்டிமடத்தை சேர்ந்த விஷால் 18 ஆகிய இருவரும் சாலையோரம்  நடந்து சென்று கொண்டிருந்தனர்.  

    அப்போது ஞானப் பிரகாசம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்ற விஷால்,  ராஜபிரகாஷ் ஆகியோர் மீது எதிப்பாராத விதமாக மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஞானப்பிரகாசம்  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த விஷாலும், ராஜ பிரகாஷ் ஆகிய இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து ஜெயங்கொண்டம்  போலீசார் வழக்கு  பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    ஆண்டிடம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் அருகே முன்னுரான் காடுவெட்டி தெற்கு தெருவை சேர்ந்த காத்தாயி அம்மாள்  வயது 75. இவர் அதே கிராமத்தில் உள்ள தனது பேரன் பிரபாகரன் வயது 33 அவரது வீட்டில் வசித்து வருகின்றனர். இவர் தினமும் வயலுக்கு சென்று வருவது வழக்கம். 

    நேற்று காலை 11 மணி அளவில் வயலுக்கு சென்ற காத்தாயி அம்மாள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.   இதனால் உறவினர்கள் மற்றும் பேரன் பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும் தேடிக் கொண்டிருந்தனர். 

    அப்போது  பூவாணி பட்டு ஏரிக்கரை அருகில் வாய்க்காலில்   காத்தாயி அம்மாள் இறந்து  கிடப்பதாக அந்த வழியாக   மோட்டார் சைக்களில் வந்த தம்புசாமி என்பவர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார். 

    இதைத் தொடர்ந்து அவர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது  காத்தாயி அம்மாள் காதில் இருந்த தோடு மூக்குத்தி இல்லாமல் இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

    அதைப் பார்த்த பேரன் மற்றும் உறவினர்கள்அதிர்ச்சி யடைந்தனர். நகைக்காக மூதாட்டியை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்பது தெரிய வருகிறது. 

    மேலும் இது குறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று  காத்தாயி அம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து பிரபாகரன் ஆண்டிமடம் போலீசில் புகார் செய்தார்.   அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    அரியலூர்:

    அரியலூர்  ஜெயங்கொண்டம் ஆண்டிமடம்  அருகே உள்ள அகினேஸ்புரம்  நடுத்தெருவை சேர்ந்தவர் பெரிய நாயகம்.  இவரது மனைவி நட்சத்திரமேரி வயது70. இவர் நேற்று மாலை 4 மணி அளவில் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென  நட்சத்திரமேரி காதில் அணிந் திருந்த கம்மல்  தோட்டை அறுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    அப்போது அவர்சத்தம் போடவே அருகில் இருந்தவர் கள் ஓடிவந்து  மூதாட்டியை மீட்டு ஆண்டிமடம்  அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து நட்சத்திரமேரி ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர்குண சேகரன் வழக்கு பதிந்து மூதாட்டியிடம் நகை கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்.
    அரியலூர் பேருந்து நிலை யத்தில் உலக காச நோய் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    அரியலூர்:

    உலக காச நோய்தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி கடை பிடிக்கப் படுகிறது. காசநோயை உண்டாக்கக் கூடிய மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்  கிருமியை கண்டுபிடித்த தினமே உலக காச நோய்தினமாகும்.  

    அந்த வகையில் அரியலூர் பேருந்து நிலையத்தில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இப்பேரணி அரியலூர்  பேருந்து நிலையத்தில்  புறப்பட்டு நிர்மலா பெண்கள்  மேல் நிலைப்பள்ளியில் நிறை வடைந்தது.

    இரண்டு வாரத்திற்குமேல் இருமல், மாலை நேர காய்ச் சல், பசியின்மை, எடை குறைதல், நெஞ்சுவலி  போன்றவை காசநோயின் அறிகுறிகள் ஆகும். இந்நோய் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள்  மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    காசநோய் இருப்பது உறுதியானால் தினசரி கூட்டு மருந்து சிகிச்சை முறையில் மாத்திரைகள் எடுத்து கொள்ளவேண்டும். மாத்திரைகள்  தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் காசநோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.

    அரியலூர் மாவட்டத்தில் காசநோயின் தாக்கத்தை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின்  சார்பில் பொதுமக்கள் மற்றும்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காசநோய் குறித்த விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் பரிசோதனை முகாம் நடத்துல் போன்ற  பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காசநோய் பரவும் விகிதம் தடுக்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்ற விழிப் புணர்வு பேரணி மூலம்பொது மக்கள் காசநோய் பற்றி தெரிந்து கொண்டு தங்களை காசநோயிலிருந்து தற்காத்து கொள்வதுடன் காசநோய் இல்லா உலகம் படைக்க வழி வகை ஏற்படும் என தெரிவித்தார்.

    பேரணியில், அரியலூர் அரசு  மருத்துவக்கல்லூரி முதல்வர்  முத்துகிருஷ்ணன், துணை இயக்குநர்  (காச நோய்) நெடுஞ்செழியன், மருத்துவர்கள், அரசு கலைக்கல்லூர் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தேசிய காச நோய் ஒழிப்புத்திட்ட பணி யாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    சுத்துக்குளம் கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்துக்குளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விழாவின்போது வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டியும் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா மற்றும் ஜல்லக்கட்டுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    இதில் கோவில் திருவிழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தடையை மீறி அக்கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் ஜே.சி.பி எந்திரம் வரவழைக்கப்பட்டு கம்பி வேலிகளை அகற்றினர். இதில் ஆத்திரமடைந்த அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் தாசில்தார் வாகனத்தை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாகனத்தில் உள்ளே இருந்த தாசில்தாரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி சூழ்ந்துகொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஜீப் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது.

    பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலை கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அங்கிருந்தவர்களை விரட்டி விட்டு தாசில்தாரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குண்டவெளி கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிவராமன், பரசுராமன், ராமஜெயம் உள்பட 27 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் அசம்பாவிதங்களை தடுக்க சுத்துக்குளம் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாசில்தாரை தாக்கி அவரின் ஜீப் கண்ணாடியை நொறுக்கிய சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
    அரியலூர் :

    அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்  கால்நடைகளுக்கு கால்  மற்றும் வாய்  நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ரமண  சரஸ்வதி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
     
    ஒவ்வொரு ஆறு மாதங்க ளுக்கு ஒரு முறை இந்த தடுப்பூசிகளை கால்நடைகளுக்கு செலுத்துவதன் மூலம் இந் நோயினை கட்டுப்படுத்த முடியும்.  மாவட்டத்தில் 21  நாட்களில்  1.46  லட்சம் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. 

    மேலும், மாடுகளுக்கு   காதுகளில்  அடையாள வில்லைகள் அணி விக்கப்பட்டு  தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் ஏற்றப்பட உள்ளது. 

    இந்த தடுப்பூசியானது முற்றிலும் இலவசமாக கால் நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில்  உள்ள அனைத்து கால்நடை வளர்க் கும் விவசாயிகளும் தங்களது கால்நடைகளை  கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    தொடர்ந்து அவர்,3 பேருக்கு புல் நறுக்கும் கருவிகளும்,  கால்நடை  உரிமையாளர்களுக்கு கலப்பின தாது உப்புகளும்     வழங்கினார். மேலும்  இம்முகாமில்  450 கால்நடைகளுக்கு  கோமாரி தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

    முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை  இயக்குனர்  ஹமீது அலி,  உதவி  இயக்குநர்கள் செல்வராசு, சொக்கலிங்கம் மற்றும்  கால்நடை  மருத்துவர்கள்,   உள்ளாட்சி   பிரதிநிதிகள்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

    தா.பழூரில் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

    அரியலூர் மாவட்டத்தில் வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொது மக்களிடம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

    இதன் ஒரு பகுதியாக தா.பழூரில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடை பெற்றது. 

    தா.பழூர் வட்டார வேளாண் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் அசோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அட்மா திட்ட மேலாளர் விஜய் முன்னிலை வகித்தார். 

    நிகழ்ச்சியில் கோடை உழவு, மண் பரிசோதனை, விதை நேர்த்தி செய்தல், இயற்கை சார்ந்த உரங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து கிராமிய கலைகள் மூலம் ஆடல், பாடலுடன் கலைக் குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    வருகிற 20-ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் 

    அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்க ளுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட  நிர்வாகம் மற்றும் மாவட்ட  வேலை  வாய்ப்பு மற்றும்  தொழில்நெறி  வழி காட்டல் மையம், அரியலூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு   முகாம்  வருகிற 20&ந்தேதி நடக்கிறது.
     
    அரியலூர் மாவட்டம், கீழப்பழூர்  அரசினர்  பாலிடெக்னிக் கல்லூரி வளாகத் தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடை பெற உள்ளது. இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள்   மேலும் திருச்சி, சென்னை,  கோவை,  கரூர், திருப்பூர்  மற்றும்  ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெறும் மனுதாரர்களது வேலை வாய்ப்பு பதிவுகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.  18  வயது  முதல் 35  வயது  வரையிலான 8&ஆம்   வகுப்பு   தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல்,  ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். 

    மேலும், இளைஞர்கள் வேலை  வாய்ப்பு  பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர் பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவ தற்கும்,  அயல்நாட்டு வேலை  வாய்ப்பு  பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல் நாட்டு   வேலை வாய்ப்பு  நிறுவனம் மூலம் 

    ஆலோசனைகள் வழங்குவ தற்கும் வேலை  வாய்ப்பு தொடர்பான  உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலை   வாய்ப்பு மற்றும் தொழில்  நெறி  வழிகாட்டல் மையத்திற்கும்    தனித்தனி அரங்குகள்   அமைக்கப்பட வுள்ளது. 

    எனவே இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மேற்கண்ட தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in   என்ற இணையதளத்தில் தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து பங்கேற்று பயனடையுமாறு    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    பஸ்சில் வழி தவறி வந்த மூதாட்டியை மீட்டு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
    அரியலூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த எடமேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்சியம். மூதாட்டியான இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவர். 

    இந்தநிலையில் துக்க நிகழ்ச்சியில் கலந்து  கொள்வ தற்காக கும்ப கோணம் பேருந்து நிலையத்திலிருந்து, அரசு பேருந்தில் பயணித்த அவர் தவறுதலாக மாற்று பேருந்தில் ஏறி விட்டதாக தெரிகிறது. 

    இந்த நிலையில் வழி தவறி வந்த மூதாட்டியை அரசு பேருந்து கண்டக்டர் தா.பழூர் போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தார். சப்&இன்ஸ் பெக்டர் வேல்முருகன்மற்றும் தலைமை காவலர் முருகன், கிராம நிர்வாக  அலுவலர் அய்யப்பன் ஆகியோர்  தலை மையிலான போலீசார் வழிதவறி தவித்து வந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். 

    இதில் அவரதுஅடையாள அட்டையில் உள்ள  முக வரியை கொண்டு உறவினர் களுக்கு போலீசார் தகவல் தெரியப்படுத்தினர். பின்னர் தா.பழூர்காவல் நிலையத்திற்கு வந்தஉறவினர் களை உறுதி செய்தபோலீ சார் அவர்களிடம்மூதாட்டியை ஒப்படைத்தனர். 

    மேலும் திறம்பட விசா ரணை செய்து மூதாட்டியை உரிய நேரத்தில் உறவினரிடம் ஒப்படைத்த போலீசார் மற்றும் வருவாய்த் துறை யினருக்கு மூதாட்டி குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்
    ×