என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரணியை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.
அரியலூரில் காசநோய் விழிப்புணர்வு பேரணி
அரியலூர் பேருந்து நிலை யத்தில் உலக காச நோய் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரியலூர்:
உலக காச நோய்தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி கடை பிடிக்கப் படுகிறது. காசநோயை உண்டாக்கக் கூடிய மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் கிருமியை கண்டுபிடித்த தினமே உலக காச நோய்தினமாகும்.
அந்த வகையில் அரியலூர் பேருந்து நிலையத்தில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி அரியலூர் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு நிர்மலா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நிறை வடைந்தது.
இரண்டு வாரத்திற்குமேல் இருமல், மாலை நேர காய்ச் சல், பசியின்மை, எடை குறைதல், நெஞ்சுவலி போன்றவை காசநோயின் அறிகுறிகள் ஆகும். இந்நோய் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
காசநோய் இருப்பது உறுதியானால் தினசரி கூட்டு மருந்து சிகிச்சை முறையில் மாத்திரைகள் எடுத்து கொள்ளவேண்டும். மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் காசநோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.
அரியலூர் மாவட்டத்தில் காசநோயின் தாக்கத்தை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காசநோய் குறித்த விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் பரிசோதனை முகாம் நடத்துல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காசநோய் பரவும் விகிதம் தடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற விழிப் புணர்வு பேரணி மூலம்பொது மக்கள் காசநோய் பற்றி தெரிந்து கொண்டு தங்களை காசநோயிலிருந்து தற்காத்து கொள்வதுடன் காசநோய் இல்லா உலகம் படைக்க வழி வகை ஏற்படும் என தெரிவித்தார்.
பேரணியில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், துணை இயக்குநர் (காச நோய்) நெடுஞ்செழியன், மருத்துவர்கள், அரசு கலைக்கல்லூர் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தேசிய காச நோய் ஒழிப்புத்திட்ட பணி யாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story