என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    தா.பழூரில் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடை பெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

    அரியலூர் மாவட்டத்தில் வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொது மக்களிடம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

    இதன் ஒரு பகுதியாக தா.பழூரில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடை பெற்றது. 

    தா.பழூர் வட்டார வேளாண் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் அசோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அட்மா திட்ட மேலாளர் விஜய் முன்னிலை வகித்தார். 

    நிகழ்ச்சியில் கோடை உழவு, மண் பரிசோதனை, விதை நேர்த்தி செய்தல், இயற்கை சார்ந்த உரங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து கிராமிய கலைகள் மூலம் ஆடல், பாடலுடன் கலைக் குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    Next Story
    ×