என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழிதவறி வந்த மூதாட்டியை தா.பழூர் போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்த போது எடுத்த படம்.
வழி தவறி வந்த மூதாட்டியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார்
பஸ்சில் வழி தவறி வந்த மூதாட்டியை மீட்டு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
அரியலூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த எடமேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளஞ்சியம். மூதாட்டியான இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவர்.
இந்தநிலையில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக கும்ப கோணம் பேருந்து நிலையத்திலிருந்து, அரசு பேருந்தில் பயணித்த அவர் தவறுதலாக மாற்று பேருந்தில் ஏறி விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் வழி தவறி வந்த மூதாட்டியை அரசு பேருந்து கண்டக்டர் தா.பழூர் போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தார். சப்&இன்ஸ் பெக்டர் வேல்முருகன்மற்றும் தலைமை காவலர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் ஆகியோர் தலை மையிலான போலீசார் வழிதவறி தவித்து வந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவரதுஅடையாள அட்டையில் உள்ள முக வரியை கொண்டு உறவினர் களுக்கு போலீசார் தகவல் தெரியப்படுத்தினர். பின்னர் தா.பழூர்காவல் நிலையத்திற்கு வந்தஉறவினர் களை உறுதி செய்தபோலீ சார் அவர்களிடம்மூதாட்டியை ஒப்படைத்தனர்.
மேலும் திறம்பட விசா ரணை செய்து மூதாட்டியை உரிய நேரத்தில் உறவினரிடம் ஒப்படைத்த போலீசார் மற்றும் வருவாய்த் துறை யினருக்கு மூதாட்டி குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்
Next Story






