என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்த காட்சி
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
அரியலூர் :
அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஒவ்வொரு ஆறு மாதங்க ளுக்கு ஒரு முறை இந்த தடுப்பூசிகளை கால்நடைகளுக்கு செலுத்துவதன் மூலம் இந் நோயினை கட்டுப்படுத்த முடியும். மாவட்டத்தில் 21 நாட்களில் 1.46 லட்சம் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.
மேலும், மாடுகளுக்கு காதுகளில் அடையாள வில்லைகள் அணி விக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் ஏற்றப்பட உள்ளது.
இந்த தடுப்பூசியானது முற்றிலும் இலவசமாக கால் நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை வளர்க் கும் விவசாயிகளும் தங்களது கால்நடைகளை கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர்,3 பேருக்கு புல் நறுக்கும் கருவிகளும், கால்நடை உரிமையாளர்களுக்கு கலப்பின தாது உப்புகளும் வழங்கினார். மேலும் இம்முகாமில் 450 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி, உதவி இயக்குநர்கள் செல்வராசு, சொக்கலிங்கம் மற்றும் கால்நடை மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






