என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
சாலை விபத்தில் வாலிபர் பலி
ஜெயங்கொண்டத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் மெயின் ரோடு தெருவைச் சேர்ந்தவர் ஞானபிரகாசம் (வயது37). இவர் மோட்டார்சைக்கிளில் ஆண்டிமடத்தில் இருந்து கல்லாத்தூர் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜபிரகாஷ் 20 ஆண்டிமடத்தை சேர்ந்த விஷால் 18 ஆகிய இருவரும் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஞானப் பிரகாசம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்ற விஷால், ராஜபிரகாஷ் ஆகியோர் மீது எதிப்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஞானப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த விஷாலும், ராஜ பிரகாஷ் ஆகிய இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






