என் மலர்
அரியலூர்
சிறந்த நிர்வாகத்தின் மூலம் வருவாய் பற்றாக்குறையை குறைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூரில் செய்தியா ளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது :
தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் சிறந்த முறையில் பல்வேறு அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 8 மாதங்களில் சிறப்பான நிர்வாகத்தின் மூலம் வருவாய் பற்றாக் குறையை குறைத்து இருப்பது பாராட்டுக்குரியது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது இயல்பான ஒன்றுதான். ஆனால் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டு இலங்கை அரசு இந்தியாவுக்கு பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக வும், இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலனை செய்ய வேண்டும்.
உக்ரைனிலிருந்துபோர் காரணமாக இந்தியா திரும் பிய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் மேலும் உக் ரைன்&ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா இருநாடுகளிடமும் பேசி அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

சம்பளம் வழங்காத ஜெயங்கொண்டம் நகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 188 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளமும், நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து போராட்டம் நடத்தினர். பின்னர் இவர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அறிந்த நகராட்சி ஆணையர், நகர்மன்ற தலைவர், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து துப்புரவு பணியாளர்கள் கூறும் போது,
எங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை முறையாக வழங்கவில்லை. இது குறித்து நாங்கள் பலமுறை நிர்வாகத்திடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு சம்பளத்தை வழங்கினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். இதனை கேட்ட அதிகாரிகள், அவர்களிடம் சமாதான பேச்சில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் வயது 29. இவர் அந்தப் பகுதியில் உள்ள ஈஸ்வரன் குளத்திற்கு குளிக்க சென்றார். பின்னர் அவர் குளத்தில் குளித்தார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராத தால் அக்கம் பக்கத்தினர் பதற்றமடைந்து. இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் மற்றும் காட்டுமன்னார்குடி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுடன் சேர்ந்து முருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அரியலூர் அருகே குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து ஆசிரியையிடம் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் போலீஸ் சரகம், வண்ணம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். ராணுவ வீரர். இவரது மனைவி மலர்விழி வயது 47. அரசு பள்ளி ஆசிரியர்.
இவர் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மலர்விழியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆசிரியர் மலர்விழி வீட்டிற்குள் சென்றதும், ஒருவர் பின்புறமாக சென்று அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி உள்ளனர்.
மலர்விழி திருடன் திருடன் என சத்தம் போட்டதும் உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டியுள்ளனர். சாத்தமங்கலம் அருகே திருடர்கள் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் பழுதாகி விட்டது.
அப்போது பின் தொடர்ந்து வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு திருடர்களை பிடிக்க முயலும் போது கத்தியை காட்டி மிரட்டி விட்டு அவர்கள் வந்த வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு திருடர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.
கீழப்பழுவூர் போலீசில் ஆசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் ரமணசரஸ்வதி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வளர்ச்சித்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஓலையூர் ஊராட்சியில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், ஓலையூர் ஊராட்சி மேலத்தெரு காலனியில் ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மெட்டல் சாலை பணி மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் பாலம்கட்டுமானப் பணியினையும், ராமர் கோவில் அருகில் ரூ.7.10 லட்சம் மதிப்பீட்டில்அமைக்கப் பட்டுள்ள தார் சாலை பணியினையும்,
காலனித்தெரு, திரௌபதி அம்மன்தெரு, நடுத்தெரு, பெரியபண்டாரக் கோவில் தெரு ஆகிய இடங்களில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளி களுக்குவழங்கப்பட்ட வீடு கட்டும் பணிகள் முன்னேற்றம் குறித்தும், மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற் கொள்ளப் பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், வீட்டின் கட்டுமானப் பணிகளை விரைவாக கட்டி முடிக்கவும், பணி தொடங்காத பயனாளி கள் பணியினை விரைவாக தொடங்கவும், முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளவும்,
மேலும் நடைபெறும் பாலப்பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டி முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தர விட்டார்.
தத்தனூர் எம்.ஆர்.சி.கல்லூரியில் தேசிய அளவில் நெட்பால் போட்டி நடைபெற்றது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டிகள் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
போட்டிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
எம்.ஆர்.சி. கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் தலைமையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், மகாராஷ்டிரா, பெங்களூர், ஆந்திரா, கர்நாடகா, விஜயவாடா, லக்னே , நிஜாம் பாத் உள்ளிட்ட 23 மாநிலங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், திரவிய பொடி உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
அரியலூர் அலந்துறையார் கோயில் சன்னதியிலுள்ள முருகனுக்கும், பெரம்பலூர் சாலையிலுள்ள பாலசுப்பிரமணியன் சுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேகமும்,
செந்துறை நெய்வனத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செல்வசுப்ரணியர் திருக்கோவிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.
இதே போல் திருமழபாடி, கீழப்பழுவூர், பொன்பரப்பி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர் ஆகிய பகுதிகளிலும் வி.கைகாட்டி, கயர்லாபத், அஸ்தினாபுரம்,
இலுப்பையூர்,இறவாங்குடி, சோழன்மாதேவி, வனதிராயன்பட்டினம், கீழஎசனை, குருவாடி ஆகிய கிராமங்களில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம் காவடி எடுத்து அபிஷேகம் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூரில் 22,100 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்து, பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:&
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட 22,100 சிறார்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு பள்ளி கள், 15 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 32 தனியார் பள்ளிகள் உள்ளன.
இதில் பயிலும் 7,8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப் பூசி செலுத்தும் பணி நடை பெறவுள்ளது.
இதில் முதற்கட்டமாக 25 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12&14 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும்.
கோவின் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணி யாளர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த உள்ளனர்.
எனவே, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி பணியினை செயல்படுத்திட சுகாதார துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்

மனைவி சாவில் மர்மம் இருப்பதாக வியாபாரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வடகடல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன்(வயது 47). மாட்டு வியாபாரி. இவருக்கு திருமணமாகி பூங்கொடி(42) என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். நடராஜன் வழக்கம்போல் வேலை நிமித்தமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜன், பூங்கொடிக்கு போன் செய்துள்ளார். ஆனால் பூங்கொடி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடராஜன் உடனடியாக வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தாழ்வாரத்தில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பூங்கொடி தொங்கியதை கண்டு நடராஜன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக உடையார்பாளையம் போலீசில் நடராஜன் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மனைவி சாவில் மர்மம் உள்ளது. விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பூங்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து பூங்கொடியின் சாவுக்கான காரணம் என்ன? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு தாய்-தந்தை இல்லை. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி ஊர் சுற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு கல்லாத்தூர் டாஸ்மாக் மதுபானக்கடையில் அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அந்த டாஸ்மாக் மதுபானக்கடை அருகாமையில் உள்ள பொதுகழிப்பிட வாசல் முன்பு தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுதாகர் பிணமாக கிடந்தார். இன்று காலை அப்பகுதியில் வயல்களுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட சுதாகருக்கும் அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் டாஸ்மாக் மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறில் அவரை கட்டையால் அடித்து கொன்று விட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ் தெரிவித்தார்.
டாஸ்மாக் மதுபானக்கடை அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் ஓ.பி., சீட்டுக்கு நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
அரியலூர்:
அரியலூரில் இந்த ஆண்டு ஜனவரியில் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. இது மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. தற்போதைய நிலையில் தினமும் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அட்மிஷன் போட நோயாளிகளிடம் ஓ.பி. சீட்டுக்கு தலா ரூ. 50 லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
அரியலூர் கோவில் பாளையத்தை சேர்ந்த எம். குமார் என்ற இளைஞர் கூறும்போது, கடந்த செவ்வாய்க்கிழமை எனது மாமாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அப்போது அங்கிருந்த நர்சு அட்மிஷன் போட்டு அவசர சிகிச்சைக்கு அனுப்ப ஓ.பி. சீட்டுக்கு ரூ. 50 கேட்டார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது எல்லோருக்கும் இது கட்டாயம் என்றார். அதைதொடர்ந்து ரூ. 50 கொடுத்து சீட்டை பெற்று மாமாவை அட்மிட் செய்தோம். அந்த தொகைக்கு ரெசீது எதுவும் வழங்கப்படவில்லை. இதுபோன்று புறநோயாளிகளிடமும் லஞ்சம் வாங்குவதாக பல நோயாளிகள் தெரிவித்தனர்.
வசதி இல்லாதவர்கள்
தனியார் ஆஸ்பத்திகளுக்கு செல்ல வசதி இல்லாத ஏழை, எளிய மக்களே அரசு ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள். இந்த நிலையில் ஏழை மக்களிடம் லஞ்சம் வாங்குவது கண்டிக்க தக்கது. இதில் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு லஞ்ச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரியலூர் பகுதியை சேர்ந்த கந்தன் என்பவர் கூறும்போது, இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இப்போது அதிகம் பேர் வருகிறார்கள். கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி லஞ்சம் கேட்கிறார்கள் என தெரிவித்தார்.
இதுபற்றி ஆஸ்பத்திரி அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, இந்த பிரச்சினையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தவறுசெய்பவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்றனர்.
சாலை விபத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பலியானார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது54). இவர் த.சோழங்குறிச்சி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சம்பவதன்று ரேஷன் கடையில் பணி முடிந்து மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந் தார். உடையார் பாளையம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராஜேந்திரன் மொபட் மீது எதிரே சூரிய மணல் கிராமத்தை சேர்ந்த பாலு சாமி (45) ஓட்டி வந்த மொபட் மோதியது.
இதில் பலத்தகாயமடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டுஜெயங் கொண்டம் அரசு ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.