search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ந
    X
    அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ந

    முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறை தீர்க்கும் குமரன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், திரவிய பொடி உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    அரியலூர் அலந்துறையார் கோயில் சன்னதியிலுள்ள முருகனுக்கும், பெரம்பலூர் சாலையிலுள்ள பாலசுப்பிரமணியன் சுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேகமும்,

    செந்துறை நெய்வனத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செல்வசுப்ரணியர் திருக்கோவிலிலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

    இதே போல் திருமழபாடி, கீழப்பழுவூர், பொன்பரப்பி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர் ஆகிய பகுதிகளிலும் வி.கைகாட்டி, கயர்லாபத், அஸ்தினாபுரம்,  

    இலுப்பையூர்,இறவாங்குடி, சோழன்மாதேவி, வனதிராயன்பட்டினம், கீழஎசனை, குருவாடி ஆகிய கிராமங்களில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம் காவடி எடுத்து அபிஷேகம் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடை பெற்றது.  

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×