என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    டாஸ்மாக் மதுபானக்கடை அருகே வாலிபர் அடித்துக்கொலை

    ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு தாய்-தந்தை இல்லை. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி ஊர் சுற்றி வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு கல்லாத்தூர் டாஸ்மாக் மதுபானக்கடையில் அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அந்த டாஸ்மாக் மதுபானக்கடை அருகாமையில் உள்ள பொதுகழிப்பிட வாசல் முன்பு தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுதாகர் பிணமாக கிடந்தார். இன்று காலை அப்பகுதியில் வயல்களுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையுண்ட சுதாகருக்கும் அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் டாஸ்மாக் மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறில் அவரை கட்டையால் அடித்து கொன்று விட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ் தெரிவித்தார்.

    டாஸ்மாக் மதுபானக்கடை அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×