என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
ஜெயங்கொண்டம் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் வயது 29. இவர் அந்தப் பகுதியில் உள்ள ஈஸ்வரன் குளத்திற்கு குளிக்க சென்றார். பின்னர் அவர் குளத்தில் குளித்தார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராத தால் அக்கம் பக்கத்தினர் பதற்றமடைந்து. இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் மற்றும் காட்டுமன்னார்குடி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுடன் சேர்ந்து முருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
Next Story






