என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
அரியலூரில் 22,100 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்
அரியலூரில் 22,100 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்து, பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:&
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட 22,100 சிறார்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு பள்ளி கள், 15 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 32 தனியார் பள்ளிகள் உள்ளன.
இதில் பயிலும் 7,8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப் பூசி செலுத்தும் பணி நடை பெறவுள்ளது.
இதில் முதற்கட்டமாக 25 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12&14 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும்.
கோவின் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணி யாளர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த உள்ளனர்.
எனவே, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி பணியினை செயல்படுத்திட சுகாதார துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்

Next Story