என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு செய்த  போது எடுத்த படம்.
    X
    வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

    அரியலூர் மாவட்டத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் ரமணசரஸ்வதி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கிராமப்புறங்களில்  அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில்  வளர்ச்சித்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஓலையூர் ஊராட்சியில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    இந்த ஆய்வில், ஓலையூர் ஊராட்சி மேலத்தெரு காலனியில் ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மெட்டல் சாலை பணி மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் பாலம்கட்டுமானப் பணியினையும், ராமர் கோவில்  அருகில் ரூ.7.10 லட்சம் மதிப்பீட்டில்அமைக்கப் பட்டுள்ள தார் சாலை பணியினையும், 

    காலனித்தெரு, திரௌபதி அம்மன்தெரு, நடுத்தெரு, பெரியபண்டாரக் கோவில் தெரு ஆகிய இடங்களில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பயனாளி களுக்குவழங்கப்பட்ட வீடு கட்டும் பணிகள் முன்னேற்றம் குறித்தும், மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்  மேற் கொள்ளப் பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்தார். 

    இந்த ஆய்வில், வீட்டின் கட்டுமானப் பணிகளை விரைவாக கட்டி முடிக்கவும், பணி தொடங்காத பயனாளி கள் பணியினை விரைவாக தொடங்கவும், முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளவும், 

    மேலும் நடைபெறும்   பாலப்பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டி முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி  உத்தர விட்டார்.

    Next Story
    ×