என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி தகுதி பெறாத நபர்கள் மேல்முறையீடு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில், மொத்த எடை 40 கிராமுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு 31.03.2021 அன்றுக்குள் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் அதற்குண்டான நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் தள்ளுபடிக்கு தகுதி பெறாதவர்கள் பட்டியல்கள் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் பட்டியல் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அரியலூர் சரக துணைப்பதிவாளரிடம் மேல்முறையீட்டு மனு அளித்து தீர்வு காணலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமானூர் அன்னமங்கலம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னமங்கலம் ஆதிதிராவிடர் நலதொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு திருமானூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயபாரதி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர்கள், தன்னார்வலர் ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயபாரதி பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கமிட்டி பற்றியும், நம் பள்ளி நம் பெருமை விழிப்புணர்வு பற்றியும் இல்லம் தேடி கல்வி பற்றியும் விரிவுரை ஆற்றினார்.
மேலும் நிகழ்ச்சி யில் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர். நிறைவில் பள்ளி இடைநிலை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி உரை நிகழ்த்தினார்.
ஜெயங்கொண்டத்தில் கதண்டுகள் கடித்து 2 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
ரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் மடத்துத்தெருவில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
அப்போது அங்கு இருந்த ஒரு கருவேல மரத்தை அப்புறப்படுத்திய போது அதிலிருந்த கதண்டு கூடுகள் கலைந்து அங்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த கூவத்தூர் மடத்துத்தெருவைச் சேர்ந்த பாலு, விழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், டி.மங்கலத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன், முருகேசன், ரவிச்சந்திரன் மற்றும்
அங்கு நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த அமலோற்பவமேரி வயது 70 மற்றும் அவரது மகள் அடைக்கலமேரி 54 ஆகிய 7 பேரையும் கதண்டுகள் துரத்தி துரத்தி கடித்தது.
இதில் காயமடைந்த 2 பெண்கள் உட்பட 7 பேரையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2பேர் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 5 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கூவத்தூர் பகுதியில் கதண்டுகள் துரத்தி, துரத்தி கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செந்துறை அடுத்த பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ்(22). பொக்லைன் ஆப்ரேட்டான இவர், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பக்கத்து ஊரில் பொக்லைன் கொண்டு வேலை செய்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து இரும்புலிகுறிச்சி காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அன்புராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி அன்புராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அன்புராஜ் திருச்சி மத்தியை சிறையில் அடைக்கப்பட்டார்.
குடிசைகள் கணக்கெடுக்கும் பணி வரும் 4-ந் தேதி முதல் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்துக்குள்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களின் 201 கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள புதிய குடிசைளை (2010 -ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்டவை) கணக்கெடுக்கும் பணி, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
2010-&ம் ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்டு வேறு எந்த அரசுத் திட்டத்திலும் பயன் பெறாத குடிசைகளின் விவரங்கள், ஊராட்சி தோறும் இதற்கென நியமிக்கப்பட்ட மூன்று நபர் குழுவால் கணக்கீடு செய்யப்பட உள்ளன.
இக்குழுவினர் கிராமப்பகுதிகளுக்கு கணக்கெடுப்புப் பணிக்காக வரும்போது கூரை வேயப்பட்ட குடிசையில் வசிப்பவர்கள் தங்களது ஆதார் எண், குடியிருப்பு மனை தொடர்பான பட்டா அல்லது விற்பனை ஒப்பந்தப் பதிவு ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அவர்கள் கேட்கும் குடும்ப அட்டை எண், மின் இணைப்பு எண் போன்ற இதர விவரங்களையும் வழங்க வேண்டும் என்றார்.

வாலிபர், காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் சுத்துக்குளம் கிராமத்திலுள்ள முனீசுவரன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத் திருவிழாவும், மஞ்சுவிரட்டும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், மஞ்சுவிரட்டுக்கு மட்டும் வட்டாட்சியர் ஆனந்தன் அனுமதியளிக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி, கடந்த 16- ந் தேதி மஞ்சுவிரட்டு நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்திருந்தனர்.
தகவலறிந்த வட்டாட்சியர் ஆனந்தன், கடந்த 15- ந் தேதி இரவு காவல் துறையினருடன் சுத்துக்குளம் கிராமத்துக்குச் சென்று, அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை பொக்லைன் எந்திரத்தை கொண்டு அகற்றினார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சிலர், வட்டாட்சியர் ஆனந்தனைத் தாக்கியதுடன், அவரது அரசு வாகனத்தையும் சேதப்படுத்தினர். இது குறித்து மீன்சுருட்டி காவல் துறையினர், விழாக்குழுவினர் உள்பட 47 பேர் மீது வழக்குப்பதிந்து, 18 பேரை கைது செய்தனர். மற்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும், கடலூர் மாவட்டம், வீராணம் அருகிலுள்ள பெரியபுங்கேரி கிராமத்தைச் சேர்ந்த கமலகண்ணனை தேடி, அவரது வீட்டுக்கு காவல் துறையினர் சென்றனர்.
இதையறிந்த கமலகண்ணன் தனது ஊரிலிருந்து புறப்பட்டு, மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு வந்து, நுழைவாயில் முன்பு பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதையறிந்த காவல் துறையினர், அவரை மீட்டு மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர் ஜெயங்கொண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோடை வெப்பத்தை தனிக்க போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கப்பட்டது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.வெளியில் செல்பவர்கள் நாவறண்டும், முதியவர்கள், குழந்தைகள் என பலரும் சிரமப் படுகின்றனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசாரின் சோர்வை நீக்கி, களைப்பை போக்கி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போக்கு வரத்து போலீஸ் இன் ஸ்பெக்டர் ஷாகிராபானு தலைமையிலான போக்கு வரத்து போலீஸ் சப் இன் ஸ்பெக்டர் ராஜா மற்றும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் லெமன் ஜூஸ், தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டது.

வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொடுக்கூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்ககத்தில் இடையக்குறிச்சி, துளர் மற்றும் கொடுக்கூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் 4,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களில் 2,166 பேர் கடந்த ஆண்டு நகைக்கடன் பெற்ற நிலையில் தற்போது 576 விவசாயிகளுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகக்கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நகைக்கடன் தள்ளுபடி பெறாத விவசாயிகள், அனைவரக்கும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் குவாகம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதே போல ஆனந்தவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கீழ ஆனந்தவாடி, சோழன்குறிச்சி, ஆனந்தவாடி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 4,200 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 1,530 பேர் கடந்த ஆண்டு நகைக்கடன் பெற்ற நிலையல் 527 விவசாயிகளுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து நகைக்கடன் தள்ளுபடி பெறாத விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தவலறிந்து வந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் சமாதானப்படுத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிலையை கண்டறியும் சூரிய ஒளியில் இயங்கும் வாகனத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 1 முதல் 6 வயது குழந்தைகளுக்கான எடை, உயரம் மற்றும் அவர்களது வளர்ச்சி கண்காணிக்க சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் சக்தி வாகன் விழிப்புணர்வு வாகனத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தொல்.திருமாவளவன் எம்.பி., கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்டத்தில் 1 முதல் 6 வயது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குள்ளத்தன்மை அதிகமாக காணப்படுகிறது.
மேலும் ஊட்டச்சத்து நிலையை அதிகப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சூரிய ஒளி ஆற்றலில் இயங்கும் சக்தி வாகன் விழிப்புணர்வு வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாகனத்தின் மூலம் 1 முதல் 6 வயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இனப்பெண்கள் மற்றும் வளர் இன ஆண்கள் ஆகியோர் அவர்களின் ஊட்டச்சத்து நிலையை அறிந்து கொள்ளலாம்.
மேலும், இவ்வாகனத்தில் எடைக்கு தகுந்தவாறு, எடை அதிகரிக்க மற்றும் குறைக்க, இரும்பு சத்து உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகள், போலிக் ஆசிட் நிறைந்த உணவுகள் போன்ற ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் பொறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாகனம் தமிழகத்தில் முதல்முறையாக அரியலூர் மாவட்டத்தில் தயார் செய்யப்பட்டு, அரியலூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட பயனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தினால் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது.
பொதுமக்கள் இவ்வாகனத்தினை பயன்படுத்தி 1 முதல் 6 வயது குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் அவர்களது வளர்ச்சி அறிந்து, ஊட்டச் சத்து நிலையை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு சிமெண்டு ஆலை நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேட்டுக்கொண்டார்.
அரியலூர்:
அரியலூர் அருகே கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகமை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்து பணி நியமன ஆணை வழங்கி பேசியதாவது:
பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 6 பெரிய சிமெண்டு ஆலைகள் இருந்தாலும் அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளது. சிமெண்ட் ஆலை அதிகாரிகளை சந்திக்கும்போதெல்லாம் தொடர்ந்து நான் கோரிக்கை வைக்கிறேன்.
இந்த முகாமில் சிமெண்டு ஆலைகளின் சார்பில் யாரேனும் கலந்து கொண்டுள்ளார்களா என கேட்கும்பொழுது அவர்கள் சென்னை அலுவலகம் மூலமாகத்தான் நேர்காணல் நடத்துவதாக தகவல் தெரிவித்ததாக நமது வேலைவாய்ப்பு அலுவலர்கள் தெரிவித்தார்கள்.
இந்த முகாம் மூலமாக சிமென்டு ஆலை நிறுவனங்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். மண்ணின் மைந்தனாக கோரிக்கை வைக்கிறேன். இங்குள்ள நிறுவனங்கள் பொருளீட்டுவது இந்த அரியலூர் மண்ணிலிருந்து தான். ஈட்டுகின்ற பொருளுக்கு ஈடு செய்யாவிட்டாலும், இந்த பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வரவேண்டும்.
அதேபோல் ஆண்டுதோறும் இங்கே படிக்கின்ற பொறியியல் கல்லூரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு இங்குள்ள சிமெண்டு ஆலைகள் பயிற்சி கொடுக்க முன்வரவேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.
மேலும் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மூலமாக கூட்டம் நடத்தி, அவர்கள் மூலமாகத்தான் இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்றால் அதற்கும் நான் முழு முயற்சி எடுப்பேன்.
பள்ளி, பட்டய மற்றும் பட் டப்படிப்பு முடித்தவர்கள் அதிக அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, அரசு வேலைகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதுபோன்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வேலைகளை பெற்று தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில், 1,968 வேலை நாடுநர்கள் பதிவு செய்துள்ளனர். 72 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, நேர்காணலை நடத்தி, திறமையான தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

அரியலூர் மாவட்டம் புதுச்சாவடி, சிறுவளூர் அரசு பள்ளிகளில் நடைபெற்ற மேலாண்மைக்குழு கூட்டத்தில் திரளான பெற்றோர்களும் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாலண்மை குழு சார்பில் மறுசீரமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் சம்சுதீன், கல்வியாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் கண்ணதாசன், மாநில கருத்தாளர் செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டு இந்த திட்டத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள் பற்றி எடுத்துக்கூறினார்.
கூட்டத்தில், பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் கழிவறை மேலாண்மை, தரமான குடிநீர் வசதி ஏற்படுத்துதல், பள்ளியின் வளத்தை மேம்படுத்துதல், பெண் கல்வி இடைநிற்றலை தடுத்தல், கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமத்திலுள்ள அனைத்து குழந் தைகளையும் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய பள்ளியி லேயே சேர்க்க நடவடிக்கை எடுத்தல் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதேபோல் சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடந்தது. ஊராட்சித்தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பள்ளியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், பொதுமக்களின் ஒத்துழைப்போடு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். எனவே தமிழக அரசு அறிவித்துள்ள இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த உதவும் என்றார் அவர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பத்மாவதி, கோகிலா, நாகராஜன், ரகுநா தன், தங்கபாண்டி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.
உள்ளாட்சிகளுக்கு அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை என்று தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தனியார் மண்டபத்தில் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 3 ஒன்றியங்களைச் சேர்ந்த 98 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரமணா சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. உதவி திட்ட இயக்குனர் சந்தானம் வரவேற்று பேசினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ரமண சரஸ்வதி பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பங்கு சிறப்பாக இருந்தது.
அரியலூர் மாவட்டத்தில் மகளிர் ஊராட்சி தலைவர்கள் அதிக அளவில் உள்ளார்கள் ஆனால், சில ஊராட்சி தலைவர்களுக்கு அரசின் திட்டங்கள் பற்றி சரியாக புரிந்துணர்வு இல்லை. அரசின் திட்டங்களை நன்கு புரிந்து களப்பணி ஆற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.
பின்னர் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசுகையில்: கிராம ஊராட்சிகளில் அரசால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. அரசு வழங்கப்படும் நிதியை கொண்டு வளர்ச்சி பணிகள் செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது, எனவே கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்ற புதிய உத்தரவு தற்போது உள்ளது. இதனால் அடித்தட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளது மேலும் ஊராட்சிகளில் மின்சாரம் போதிய அளவு கிடைக்காததால் விவசாயம் செய்யும் பொது மக்கள் விவசாயிகள் மிக சிரமத்திற்கு ஆளாகிறார்கள் அதை உடனடியாக மாவட்ட கலெக்டர் அதற்கான நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.