என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    குடிசைகள் கணக்கெடுக்கும் பணி

    குடிசைகள் கணக்கெடுக்கும் பணி வரும் 4-ந் தேதி முதல் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்துக்குள்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களின் 201 கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள புதிய குடிசைளை (2010 -ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்டவை) கணக்கெடுக்கும் பணி, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    2010-&ம் ஆண்டுக்குப் பிறகு கட்டப்பட்டு வேறு எந்த அரசுத் திட்டத்திலும் பயன் பெறாத குடிசைகளின் விவரங்கள், ஊராட்சி தோறும் இதற்கென நியமிக்கப்பட்ட மூன்று நபர் குழுவால் கணக்கீடு செய்யப்பட உள்ளன.

    இக்குழுவினர் கிராமப்பகுதிகளுக்கு கணக்கெடுப்புப் பணிக்காக வரும்போது கூரை வேயப்பட்ட குடிசையில் வசிப்பவர்கள் தங்களது ஆதார் எண், குடியிருப்பு மனை தொடர்பான பட்டா அல்லது விற்பனை ஒப்பந்தப் பதிவு ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அவர்கள் கேட்கும் குடும்ப அட்டை எண், மின் இணைப்பு எண் போன்ற இதர விவரங்களையும் வழங்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×