என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    நகை கடன் தள்ளுபடிக்கு மேல்முறையீடு செய்யலாம்

    அரியலூர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி தகுதி பெறாத நபர்கள் மேல்முறையீடு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில், மொத்த எடை 40 கிராமுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு 31.03.2021   அன்றுக்குள் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் அதற்குண்டான நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.

    தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் தள்ளுபடிக்கு தகுதி பெறாதவர்கள் பட்டியல்கள் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் பட்டியல் வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அரியலூர் சரக துணைப்பதிவாளரிடம் மேல்முறையீட்டு மனு அளித்து தீர்வு காணலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×