என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மேலாண்மைக் குழு கூட்டத்தில் மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் பன்
புதுச்சாவடி, சிறுவளூர் பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்
அரியலூர் மாவட்டம் புதுச்சாவடி, சிறுவளூர் அரசு பள்ளிகளில் நடைபெற்ற மேலாண்மைக்குழு கூட்டத்தில் திரளான பெற்றோர்களும் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாலண்மை குழு சார்பில் மறுசீரமைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் சம்சுதீன், கல்வியாளர் ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் கண்ணதாசன், மாநில கருத்தாளர் செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டு இந்த திட்டத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள் பற்றி எடுத்துக்கூறினார்.
கூட்டத்தில், பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் கழிவறை மேலாண்மை, தரமான குடிநீர் வசதி ஏற்படுத்துதல், பள்ளியின் வளத்தை மேம்படுத்துதல், பெண் கல்வி இடைநிற்றலை தடுத்தல், கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமத்திலுள்ள அனைத்து குழந் தைகளையும் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய பள்ளியி லேயே சேர்க்க நடவடிக்கை எடுத்தல் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதேபோல் சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடந்தது. ஊராட்சித்தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பள்ளியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், பொதுமக்களின் ஒத்துழைப்போடு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். எனவே தமிழக அரசு அறிவித்துள்ள இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த உதவும் என்றார் அவர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பத்மாவதி, கோகிலா, நாகராஜன், ரகுநா தன், தங்கபாண்டி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.
Next Story






