என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கிய காட்சி
    X
    போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கிய காட்சி

    கோடை வெப்பத்தை தனிக்க போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு

    கோடை வெப்பத்தை தனிக்க போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கப்பட்டது.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.வெளியில் செல்பவர்கள் நாவறண்டும், முதியவர்கள், குழந்தைகள் என பலரும் சிரமப் படுகின்றனர்.

    இந்நிலையில் ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து  போலீசாரின் சோர்வை நீக்கி, களைப்பை போக்கி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போக்கு வரத்து போலீஸ் இன் ஸ்பெக்டர் ஷாகிராபானு தலைமையிலான போக்கு வரத்து போலீஸ் சப் இன் ஸ்பெக்டர் ராஜா மற்றும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் லெமன் ஜூஸ், தர்பூசணி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டது.
    Next Story
    ×