என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணையை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கியபோது எடுத்தபடம். அருகில் திருமாவளவன் எ
இளைஞர்களுக்கு சிமெண்டு ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு தர வேண்டும்
அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு சிமெண்டு ஆலை நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேட்டுக்கொண்டார்.
அரியலூர்:
அரியலூர் அருகே கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகமை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்து பணி நியமன ஆணை வழங்கி பேசியதாவது:
பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 6 பெரிய சிமெண்டு ஆலைகள் இருந்தாலும் அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளது. சிமெண்ட் ஆலை அதிகாரிகளை சந்திக்கும்போதெல்லாம் தொடர்ந்து நான் கோரிக்கை வைக்கிறேன்.
இந்த முகாமில் சிமெண்டு ஆலைகளின் சார்பில் யாரேனும் கலந்து கொண்டுள்ளார்களா என கேட்கும்பொழுது அவர்கள் சென்னை அலுவலகம் மூலமாகத்தான் நேர்காணல் நடத்துவதாக தகவல் தெரிவித்ததாக நமது வேலைவாய்ப்பு அலுவலர்கள் தெரிவித்தார்கள்.
இந்த முகாம் மூலமாக சிமென்டு ஆலை நிறுவனங்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். மண்ணின் மைந்தனாக கோரிக்கை வைக்கிறேன். இங்குள்ள நிறுவனங்கள் பொருளீட்டுவது இந்த அரியலூர் மண்ணிலிருந்து தான். ஈட்டுகின்ற பொருளுக்கு ஈடு செய்யாவிட்டாலும், இந்த பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வரவேண்டும்.
அதேபோல் ஆண்டுதோறும் இங்கே படிக்கின்ற பொறியியல் கல்லூரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு இங்குள்ள சிமெண்டு ஆலைகள் பயிற்சி கொடுக்க முன்வரவேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.
மேலும் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மூலமாக கூட்டம் நடத்தி, அவர்கள் மூலமாகத்தான் இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்றால் அதற்கும் நான் முழு முயற்சி எடுப்பேன்.
பள்ளி, பட்டய மற்றும் பட் டப்படிப்பு முடித்தவர்கள் அதிக அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, அரசு வேலைகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதுபோன்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வேலைகளை பெற்று தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில், 1,968 வேலை நாடுநர்கள் பதிவு செய்துள்ளனர். 72 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, நேர்காணலை நடத்தி, திறமையான தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

Next Story