என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னமங்கலம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்ற போது எடுத்த படம்.
அன்னமங்கலம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்
திருமானூர் அன்னமங்கலம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னமங்கலம் ஆதிதிராவிடர் நலதொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு திருமானூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயபாரதி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோர்கள், தன்னார்வலர் ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெயபாரதி பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கமிட்டி பற்றியும், நம் பள்ளி நம் பெருமை விழிப்புணர்வு பற்றியும் இல்லம் தேடி கல்வி பற்றியும் விரிவுரை ஆற்றினார்.
மேலும் நிகழ்ச்சி யில் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர். நிறைவில் பள்ளி இடைநிலை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி உரை நிகழ்த்தினார்.
Next Story






