என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    உள்ளாட்சிகளுக்கு அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை

    உள்ளாட்சிகளுக்கு அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை என்று தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தனியார் மண்டபத்தில் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 3 ஒன்றியங்களைச் சேர்ந்த 98 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் கலெக்டர் ரமணா சரஸ்வதி தலைமையில்  நடைபெற்றது. உதவி திட்ட இயக்குனர் சந்தானம் வரவேற்று பேசினார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ரமண சரஸ்வதி பேசியதாவது:  அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பங்கு சிறப்பாக இருந்தது.

    அரியலூர் மாவட்டத்தில் மகளிர் ஊராட்சி  தலைவர்கள் அதிக அளவில் உள்ளார்கள் ஆனால், சில ஊராட்சி தலைவர்களுக்கு அரசின் திட்டங்கள் பற்றி சரியாக புரிந்துணர்வு இல்லை. அரசின் திட்டங்களை நன்கு புரிந்து களப்பணி ஆற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

    பின்னர் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசுகையில்: கிராம ஊராட்சிகளில் அரசால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. அரசு வழங்கப்படும் நிதியை கொண்டு வளர்ச்சி பணிகள் செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது, எனவே கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தில் காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்ற புதிய உத்தரவு தற்போது உள்ளது. இதனால் அடித்தட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளது மேலும் ஊராட்சிகளில் மின்சாரம் போதிய அளவு கிடைக்காததால் விவசாயம் செய்யும் பொது மக்கள் விவசாயிகள் மிக சிரமத்திற்கு ஆளாகிறார்கள் அதை உடனடியாக மாவட்ட கலெக்டர் அதற்கான நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.
    Next Story
    ×