என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூரில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது
    அரியலூர்:

    அரியலூர் ராஜேஷ் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 தேர்வுக்கான முதன்மை பயிற்சி வகுப்பு அரங்கம் மற்றும் படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது. 

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக அரியலூர் ராஜேஷ் ஐஏஎஸ் அகாடமி மிக சிறப்பான பயிற்சியை அளித்து, டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4  போலீஸ், எஸ்ஐ உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் எண்ணற்ற மாணவர்கள் வெற்றி பெற்று இன்று அரசுப் பணியில் உள்ளனர். 

    அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிர்ப்புறம் உள்ள டிரக்ஸ்டோர் 2வது மாடியில் இந்த பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

    ஏழை எளிய மக்கள் நடுத்தர வர்க்க மக்கள் அதிக கட்டணம் செலுத்தி முதன்மை தேர்வுகளுக்கு பயிற்சி பெற சென்னை போன்ற பெரு நகரங்களுக்குச் செல்ல முடியாமல் தங்களது வாய்ப்புகளை இழக்கின்றனர். 

    இதைக் கருத்தில் கொண்டு ராஜேஷ் ஐஐஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 குரூப்-2 உள்ளிட்ட தேர்வுகளுக்கு முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு புதிய அரங்கை  திறந்து வைத்தார். 

    இந்த பயிற்சி அரங்கில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படக்கூடிய நூலகம், முந்தைய ஆண்டு பயிற்சி வினாத்தாள்கள், தினசரி நாளிதழ்கள், இலவச வை-பை வசதி என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

    மேலும் அனைவரும் படிக்கும் வகையில் படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு நிர்வாக இயக்குனர் ராஜேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.  

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் பயிற்சி விவரங்களுக்கு 9095106081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாக இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    கிராம ஊராட்சிகளை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என கலெக்டர் ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட-மன்றத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்-டத்தின் கீழ் நடைபெற உள்ள பணிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட  கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது, அனைத்து கிராம -அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்-தின் 2&ம் பகுதியின் கீழ் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில், -தத்தனூர் கங்கைகொண்ட சோழபுரம், உள்ளிட்ட 7 கிராமங்களில் தேர்வு செய்-யப்----பட்டுள்ளது.

    இதில் பல்வேறு பணிகள் தேர்வு செய்யப்பட்டு தொடங்கப்பட உள்ளது. கிராம ஊராட்சிகளை முன்னேற்றப்  -பாதையில் கொண்டு செல்ல வேண்டும்  என்றால் முழு அர்ப்பணிப்-போடு தலைவர்கள் செயல்-பட வேண்டும்.

    தமது பதவி காலம் முடிவடைவதற்குள் தங்கள் கிராம ஊராட்சிக்கு தமது சிறப்பான பணிகள் மூலம் ஏதாவது அடை-யாளத்தை ஏற்படுத்தி செல்ல வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஊராட்சி -மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுடைய கிராமத்திற்கு தார் சாலை அமைப்பது, -சிமெண்ட் சாலை அமைப்--பது,  நிரந்தர குடிநீர் பிரச்-சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்-தனர்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர் பிரேமாவதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிர-பாகரன், குருநாதன் மற்றும் கிராம ஊராட்சி தலை-வர்கள், ஊராட்சி செயலா-ளர்கள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 42வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் ஊராட்சியில் பா.ஜ.க.வின் 42ம் ஆண்டு தொடக்கவிழா   முன்னிட்டு வாரியங்காவல் சுற்றி முக்கிய வீதிகளில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. 

    பேரணியாக 100க்கும் மேற்பட்டோர்  தேவனூர் பிரிவிலிருந்து நாகல்குழி பிரிவு வரைக்கும் நடந்து சென்று மத்திய அரசின் நலத்திட்டங்களை  மக்களுக்கு எடுத்துரைத்தனர். 

    மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளுடன் சேர்ந்து பாரத பிரதமரின் உரையை மருத்துவ பிரிவு தலைவர் இல்லத்தில் வைத்து தொலைக்காட்சியில் மக்கள் மருந்தகத்தின் நன்மைகளை பற்றி எடுத்து கூறினர். 


    இதில் மண்டல தலைவர் நீலமேகம், மாவட்ட தலைவர் ஐயப்பன், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ்,  மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பொது செயலாளர் பரமசிவம்,  வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேசன்,  அன்புச்செல்வன், வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் விஸ்வநாதன்,மாவட்ட செயலாளர் சந்திரகலா ஆறுமுகம் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    மாந்தீரிகம் செய்து தருவதாகக் கூறி, ரூ.12 லட்சத்தைப் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


    அரியலூர்:

    அரியலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த மாதம் இவரது கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய நபர், தங்களுக்கு மர்மநபர்கள் சூனியம் வைத்திருப்பதாகவும், கொல்லிமலை சென்று பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய விஜயகுமார் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.12 லட்சம் கொடுத்துள்ளார்.

    மேலும், அந்த நபர் மற்றும் கூட்டாளிகள் 2 பேர் விஜயகுமாரை இழுத்தடித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார், அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தொடர்ந்து, வழக்கு பதிந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சத்யா மகன்கள் வல்லராஜ்(வயது 25), கிருஷ்ணன்(எ) தர்மராஜ்(24), சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் சனியன் (எ) குமார் (39) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில்,

    இவர்கள் சேலம் மாவட்டம், எருமபாளையம் பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம், கைரேகை பார்ப்பதாகக் கூறி, தங்களுக்கு தோஷம், செய்வினை உள்ளதாகத் தெரிவித்து அவர்களது கைப்பேசி எண்களைப் பெற்று, பின்னர் அவர்களை அச்சுறுத்தி பணம் பறித்து வந்துள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து காவல் துறையினர் மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள கார், இரு சக்கர வாகனங்கள், நகைகள் உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
    வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
    மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து வரும் மே மாதம் 31&ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்திற்குரிய விண்ணப்பபடிவத்தினை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்று கொள்ளலாம்.

    அல்லது இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும்  வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்பஅட்டை,  ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம்,

    மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரையில்  மேற்படி சான்று களுடன்  மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடனும் நேரில் வருகை புரிந்து விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். தற்போது உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் சுயஉறுதி மொழி ஆவணத்தினை பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன்படி அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடா வுமான தாமரை ராஜேந் திரன் தலைமையில்   நடைபெற்றது.

    இதில் முன்னாள் எம்.பி. இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணி யம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அணிச் செயலாளர்கள் மாணவரணி சங்கர், மகளிரணி ஜீவா, இளை ஞரணி சிவசங்கர், வக்கீல் பிரிவு வெங்கடாஜலபதி,

    சிறுபான்மை பிரிவு அக்பர் செரிப், தொழில்நுட்ப பிரிவு சாமிநாதன், பாசறை ரீடு செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கல்லங்குறிச்சி பாஸ்கர், நகர செயலாளர் செந்தில், முன்னாள் அரசு வக்கீல் சண்முகம், ராமகோவிந்தராஜன், சாந்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கோபாலகிருஷ்ணன், ஜெயக்குமார் உட்பட அனைத்துப் பிரிவு பொறுப் பாளர்களும் கலந்து கொண்டனர்.
    வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

    அரியலூர்  மாவட்டத்தில், பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,04,055 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இத் திட்டத்தில், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஒரு வருடத் திற்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இத்தொகையானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாயிகள் 11&வது தவணை தொகையை பெறு வதற்கு தங்களது ஆதார் விப ரங்களை சரிபார்த்தல் மற் றும் ஆதார் எண்ணை வங் கிக் கணக்குடன் இணைப்பது அவசியம் ஆகும்.

    தங்களது ஆதார் எண்ணு டன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதி யுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    ஆதார் எண்ணுடன், செல் போன் எண்ணை இணைக் காத விவசாயிகள் அருகில் உள்ள இ&சேவை மையங்களை அணுகி, பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, தங்க ளது விரல் ரேகையை பதிவு செய்து, விபரங்களை சரி பார்த்து கொள்ளலாம்.

    இதற்கான கட்டணமாக ரூ.15 இ&சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த இருமுறைக ளில் ஏதே னும் ஒரு முறையில் பயனாளிகளான விவசாயிகள் தங்க ளது ஆதார் விவரங்களை 31.05.2022 ஆம் தேதிக்குள் திட்ட வலை தளத்தில் பதி வேற்றம் செய்து கொள்ள தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து, இணைக்கப்பட வில்லை எனில் 11&வது தவணை பெறுவதற்கு முன் னர் ஆதார் எண்ணை வங் கிக்கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பொது மக்களின் வசதிக்காக ஜெயங்கொண்டம் மேட்டுபாளையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் ரூபாய்.299 லட்சம் மதிப்பீட்டில், புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணியினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

    மழை காலங்களில் மேட்டுபாளயம் பகுதியில் அந்த வழியாக செல்வதற்கு பொது மக்கள் மிக சிரமம்பட்டனர். இதைத் தொடர்ந்து இங்கு அமைக்கப்படும்  இந்த உயர்மட்ட பாலத்தின் மூலம் சுமார் 25 கிராமத்திற்கு மேல் உள்ள பொது மக்களுக்கு பயன்படும் பாதையாக அமையும்.

    இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவிப் பொறியாளர் பிரியதர்ஷினி, ஜெயங்கொண்டம்  ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒப்பந்ததாரர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் மு.சரஸ்வதி, துணை தலைவர் சதீஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் ரூபாய்.299 லட்சம் மதிப்பீட்டில், புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணியினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

    மழை காலங்களில் மேட்டுபாளயம் பகுதியில் அந்த வழியாக செல்வதற்கு பொது மக்கள் மிக சிரமம்பட்டனர். இதைத் தொடர்ந்து இங்கு அமைக்கப்படும்  இந்த உயர்மட்ட பாலத்தின் மூலம் சுமார் 25 கிராமத்திற்கு மேல் உள்ள பொது மக்களுக்கு பயன்படும் பாதையாக அமையும்.

    இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவிப் பொறியாளர் பிரியதர்ஷினி, ஜெயங்கொண்டம்  ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒப்பந்ததாரர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் மு.சரஸ்வதி, துணை தலைவர் சதீஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
    14 வயது சிறுமியை 16 வயது சிறுவர்கள் இருவரும் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள சிலுவைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியது.

    பின்னர் அந்த சிறுவன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அறியாத வயதில் அதனை முழுவதுமாக நம்பிய சிறுமியும் நெருங்கி பழகினார். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட மாணவர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.

    இதற்கிடையே 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மற்றொரு சிறுவனிடம் பழகுவதை பார்த்த அந்த காதலன் சிறுமியிடம் பழகுவதை நிறுத்தி கொண்டுள்ளார். இந்தநிலையில் சிறுமியின் கால்களில் வீக்கம் ஏற்பட்டு வயிறு பெரிதாக இருந்ததை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் நீர் கட்டியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர்கள் கரும்பு வெட்ட வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். பள்ளி விடுமுறை நாட்களில் சிறுமி தனியே வீட்டில் இருந்துள்ளார். அதனை பயன்படுத்திக் கொண்டு சிறுமியை ஆசை வார்த்தை கூறி புதிதாக பழகிய மாணவரும் பலாத்காரம் செய்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் சிறுமியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதானதால் அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் சிறுமியிடம் முதலில் பழகி கர்ப்பமாக்கிய பதினோராம் வகுப்பு படிக்கும் சிறுவனையும், இரண்டாவது முறையாக பழகிய பத்தாம் வகுப்பு படித்து முடித்து வீட்டிலிருந்த சிறுவனையும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். 14 வயது சிறுமியை 16 வயது சிறுவர்கள் இருவரும் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பெட்ரோல், டீசல், கேஸ் உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    மாவட்டக் குழு சேகர், பத்மாவதி, கண்ணன், ஒன்றியக்குழு ரவிச்சந்திரன், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் கண்டன உரை நிகழ்த்தினார்.

    ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு மகாராஜன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 125 வீடுகள் இடிக்கப்பட்டன.
    அரியலூர் :

    அரியலூர் நகராட்சிக்குட் பட்ட 14 ஆவது மற்றும் 7 ஆவது வார்டுகளில் உள்ள குறிஞ்சான்குளம் மற்றும் அரசநிலையிட்டான் ஏரிக் கரைகளை ஆக்கிரமித்து கடந்த 50 ஆண்டுகளாக 125 குடும்பத்தினர் வீடுகளை கட்டி வசித்து வந்தனர்.

    இந்நிலையில், உயர்நீதி மன்றம் உத்தரவுப்படி, நீர் நிலையங்களிலுள்ள ஆக்கிர மிப்புகளை தமிழக அரசு அகற்றி வருகிறது. அதன்படி, அரியலூர்  மாவட்டத்தில் செந்துறை,  ஆண்டிமடம் பகுதி களில் ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிர மிப்புகள் மற்றும் வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப் புகளை அகற்றும் பணிகளில் வட்டாட்சியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து அரியலூர் நகரிலுள்ள குறிஞ்சான்குளம் மற்றும் அரச நிலையிட்டான் ஏரிகரைகளில் ஆக்கிரமித்து அங்கு வசித்து வரும் குடும்பத் தினர்களுக்கு, உடனடி ஆக்கி ரமித்தவர்களுக்கு வருவாய் துறையினர் பல முறை எச்ச ரிக்கை அளித்தும், அவர்கள் அங்கிருந்து காலி செய்ய வில்லை.

    இந்நிலையில், வட்டாட்சி யர் ராஜமூர்த்தி தலைமையில், 100&க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முன்னிலையில் மேற்கண்ட ஏரிக்கரைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டி ருந்த 125 வீடுகளை, 3 ஜேசி எந்திரம் மூலம் அகற்றும் பணிகள்   திங்கட்கிழமை தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் தாங்களாகவே முன்வந்து வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்திக்கொண்டனர்.

    இப்பணி இன்றும் தொடரும் என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து வீடுகளை யும் அப்புறப்படுத்தியதோடு அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்ப டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், அகற்றப்படும் வீட்டு உரிமையாளர்களில் வீடு இல்லாதவர்கள் கண்ட றியப்பட்டு   அவர்களுக்கு சமத்துவபுரத்துக்கு அருகா மையில் இடம் வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

    வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சத்திரம் அருகே சாலை மறியலில்  ஈடுபட்ட  11  பேர் கைதாகினர்.
    திருச்சி வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக ஏ.சி. பெட்டிகளை இணைக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
    திருச்சி:

    தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் கோடை விடுமுறையில் வெளியூர்களுக்கு செல்ல நடுத்தர குடும்பத்தினரும் ரெயில்களில் ஏ.சி. பெட்டியை எதிர்பார்க்கின்றனர்.

    இதற்காக ஏ.சி. 3 டயர் பெட்டிக்கு முன்பதிவு செய்ய நாட்கணக்கில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டியை இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

    தூத்துக்குடி&சென்னை மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இதுபற்றி திருச்சி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, வழக்கமாக ஒரு ரெயிலில் 22 முதல் 24 பெட்டிகள் இருக்கும்.

    இதில்  9 முதல் 10 ஸ்லீப்பர் கோச்சாக இருக்கும். 2,3 பெட்டிகளில் ஏ.சி. 3 டயர்கள் இடம்பெற்றிருக்கும். தற்போது ரெயில்வே நிர்வாகம் ஏ.சி. இல்லாத ஸ்லீப்பர் கோச் ஒன்றை மாற்றி ஏ.சி. 3 டயர் பொருத்த  திட்டமிட்டுள்ளது. இதனால் மற்ற பயணிகளுக்கு எந்த பிரச்சினையும் வராது என்றனர்.

    கூடுதல் ஏ.சி. பெட்டிகள் பொருத்தப்படுவதால் கோடை காலத்தில் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுபற்றி பயணிகள் கூறும்போது, கோடை காலத்தில் ஏ.சி. கோச்சுகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.

    எனவே ரெயில்வேயின் இந்த திட்டம் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்றனர்.
    ×