search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
    மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்களிடமிருந்து வரும் மே மாதம் 31&ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்திற்குரிய விண்ணப்பபடிவத்தினை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்று கொள்ளலாம்.

    அல்லது இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும்  வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்பஅட்டை,  ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம்,

    மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரையில்  மேற்படி சான்று களுடன்  மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடனும் நேரில் வருகை புரிந்து விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். தற்போது உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள் சுயஉறுதி மொழி ஆவணத்தினை பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×